< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
ஈரோடு
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
4 Sep 2022 9:17 PM GMT

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆபத்தான குழி

நஞ்சை புளியம்பட்டி பவானி ஆற்று பாலம் அருகே ஆபத்தான குழி உள்ளது. இந்த குழியால் அடிக்கடி அந்த பகுதியில் விபத்துகள் நடக்கின்றன. குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயம் அடைந்து உள்ளனர். எனவே விபத்தை ஏற்படுத்தும் அந்த குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வைகைமணி, பங்களாப்புதூர்.

குப்பை அள்ளப்படுமா?

கோபி மேட்டுவலவு பகுதியில் உள்ள கமலா ரைஸ் மில் 4-வது வீதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

சாலை சீரமைக்கப்படுமா?

ஈரோடு புறவழி சுற்றுச்சாலை (ரிங் ரோடு) பகுதியில் இருந்து பழனிக்கவுண்டன்பாளையம் செல்ல ரோடு ஒன்று உள்ளது. இந்த ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் இந்த ரோட்டில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்றும் உள்ளது. எனவே இந்த ரோடு வழியாக பல மாணவ, மாணவிகள் சைக்கிளில் சென்று வருகிறார்கள். அவர்கள் ரோட்டில் உள்ள குழியில் விழுந்து காயம் அடைந்து செல்கிறார்கள். எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஈரோடு.

குண்டும், குழியுமான ரோடு

ஈரோடு முனிசிபல் காலனி திரு.வி.க. ரோட்டில் ஆங்காங்கே பல பணிகளுக்காக குழி தோண்டப்பட்டு மூடப்பட்டன. ஆனால் இதுவரை ரோடு சீரமைக்கப்படவில்லை. குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வருகிறார்கள். உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், முனிசிபல் காலனி.

கழிப்பிடம் பராமரிக்கப்படுமா?

கோபியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். ஆனால் இங்குள்ள கழிப்பிடம் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு கழிப்பிடத்துக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது எனவே கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

Related Tags :
மேலும் செய்திகள்