< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
ஈரோடு
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
22 Aug 2022 8:52 PM GMT

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மரக்கிளை அகற்றப்படுமா?

அந்தியூர்-சத்தி மெயின் ரோட்டில் புதுமேட்டூர் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்குள்ள புதுமேட்டூா் என்ற ஊா் பெயா் பலகையை ரோட்டோரம் உள்ள மரத்தின் கிளைகள் மறைத்தபடி உள்ளது. இதனால் அந்த வழியாக வரும் பஸ்கள் பஸ் நிறுத்தம் இருப்பது தொியாமல் நிற்காமல் செல்கின்றன. இரவு நேரங்களில் மரக்கிளையின் நிழல் பெயர்பலகை மீது விழுகின்றன. இதனால் பெயர் பலகை தெரிவது இல்லை. எனவே அந்தியூர் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் மரக்கிளையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், புதுமேட்டூர்.

சுகாதார சீா்கேடு

ஈரோடு அகில்மேடு 7-வது வீதியில் சாக்கடை வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீா்கேடு நிலவி வருகிறது. உடனே அடைப்பை நீக்கி கழிவுநீா் செல்ல அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், அகில்மேடு 7-வது வீதி. ஈரோடு.

ஆபத்தான பள்ளம்

ஈரோடு நாச்சியப்பா 2-வது வீதியில் இருந்து முதலாவது வீதிக்கு செல்லும் ரோட்டில் ஒரு பெரிய பள்ளம் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பள்ளத்தில் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். ஆபத்தான நிலையில் காணப்படும் அந்த பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஈரோடு.

பழுதடைந்த சாலை

பர்கூர் மலைப்பகுதியில் உள்ள தாமரைக்கரையில் இருந்து ஈரெட்டி செல்லும் தார் சாலை மிகவும் பழுதடைந்து கிடக்கிறது. இதனால் இந்த ரோட்டில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து விடுகிறார்கள். எனவே ஈரெட்டி சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து செப்பனிடுவார்களா?

முருகன், தாமரைக்கரை.

சேதமடைந்த கான்கிரீட் தளம்

சத்தியமங்கலம் இக்கரை நெகமம் அருகே உள்ள கெஞ்சனூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கான்கிரீட் தளம் போடப்பட்டது. தற்போது அது சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் சிரமமாக உள்ளது. உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கெஞ்சனூர்.

தாரை அகற்ற வேண்டும்

ஈரோடு கருங்கல்பாளையம் கொங்கு நகர் வீதியில் சில நாட்களுக்கு முன்பு தார் ரோடு போடப்பட்டது. மீதமுள்ள தார் டின்னை பாதுகாப்பு இன்றி அந்த வீதியிலேயே வீசிவிட்டு சென்றனர். அந்த பகுதியில் குழந்தைகள் அதிகம் விளையாடி வருகின்றனர். அவர்கள் தெரியாமல் அந்த தார் டின்னில் சிக்கிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. உடனே தார் டின்னை அகற்ற வேண்டும்.

பொதுமக்கள், கருங்கல்பாளையம், ஈரோடு.


வீணாகும் குடிநீர்

கொடுமுடி-கரூர் நெடுஞ்சாலையில் என்ற சோளக்காளிபாளையம் பனங்காட்டூர் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. உடனே குடிநீா் குழாய் உடைப்பை சீரமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சோளக்காளிபாளையம்

Related Tags :
மேலும் செய்திகள்