< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
22 May 2023 12:45 AM IST

தினத்தந்தி புகார் பெட்டி

சாலையை சீரமைக்க வேண்டும்

வாறுதட்டு பகுதியில் இருந்து தோப்புக்கு செல்லும் சாலையை நடுவிளாகம், மடத்துவிளாகம், மண்ணடி, பெருந்தோட்டம் உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை கடந்த ஆண்டு பெய்த கனமழையில் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரேம்ராஜ் வாறுதட்டு.

சுகாதார சீர் கேடு

புதுக்கடை அம்பாள் நகரில் சந்திமூட்டில் சாலையோரம் கழிவுநீர் ஓடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவற்றை முறையாக பராமரிக்காததால் செடிகள் வளர்ந்தும், கழிவுநீர் வடிந்ேதாட வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ேமலும், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, கழிவுநீர் ஓடையை தூர்வாரி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுகிதேவ், புதுக்கடை.

நடவடிக்கை தேவை

தக்கலையில் கல்குளம் தாலுகா அலுவலகம் உள்ளது. தக்கலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்காக இந்த அலுவலகத்தில் வந்து பயனடைந்து வந்தனர். தற்போது இந்த அலுவலகத்தில் ஆதார் திருத்தம் செய்யும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தேவைகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அதில் திருத்தம் செய்ய முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி தாலுகா அலுவலகத்தில் ஆதார் திருத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

-பெர்னார்த், திங்கள்சந்தை.

சேதமடைந்த சாலை

பூதப்பாண்டி போலீஸ்நிலையம் பகுதியில் இருந்து சுடுகாட்டுக்கு செல்லும் சாலையில் கருந்தளம் சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையில் 2 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளன. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாராயணசாமி, பூதப்பாண்டி.

தெருநாய்களால் தொல்லை

வடக்கு தாமரைக்குளம் பகுதியில் தெரு வீதியில் நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால், தெருக்களில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பெண்கள், குழந்தைகளை விரட்டுவதும், கடிக்கவும் செய்கிறது. இதனால், தெருக்களில் செல்லும் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடனேயே செல்கின்றனர். எனவே, தெருநாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுபாஷ், வடக்கு தாமரைகுளம்.

ஆபத்தான மின்கம்பம்

கருங்கலில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் சாலையில் கருமாவிளை உள்ளது. இந்த பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயத்தின் அருகில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் சரிந்து விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுனில்குமார், கருங்கல்.

பயணிகள் அவதி

ஆற்றூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆற்றூர் ஜங்ஷனில் பயணிகள் நிழற்குடை இருந்தது. அது சேதமடைந்ததால் பேரூராட்சி நிர்வாகத்தால் இடித்து அகற்றப்பட்டது. அதன்பின் பயணிகளுக்கு எந்த வசதியும் செய்யவில்லை. இதனால் பஸ் ஏற வரும் பயணிகள் சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலையும், மழை பெய்தால் நனைந்து அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே புதிய நிழற்குடை அமைக்கப்படும் வரை தற்காலிக வசதி ஏற்படுத்தி கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜே.அகஸ்டின், ஆற்றூர்.

மேலும் செய்திகள்