< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
7 Dec 2022 6:45 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டி

மரத்தை அப்புறப்படுத்த வேண்டும்

தக்கலையில் கல்குளம் தாலுகா அலுவலகத்தின் எதிர்புறத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி வளாகத்தில் வகுப்பறை கட்டிடத்தின் முன்பகுதியில் நிற்கும் ஒரு தேக்குமரத்தின் அடிப்பகுதி மிகவும் சிதலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. சூறைகாற்று, மழை போன்ற இயற்கை சீற்றங்களின் போது மரம் கீழே விழுந்து பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் நிற்கும் மரத்தை வெட்டி அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரன், தக்கலை.


சாலையில் வீணாகும் குடிநீர்

ஈத்தாமொழியில் இருந்து ராஜாக்கமங்கலம் வழியாக செல்லும் மேற்கு கடற்கரை சாலையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கடல்வாழ் அறிவியல் தொழில்நுட்ப கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் முன்பு கூட்டு குடிநீர் திட்டத்திற்காக சாலையின் நடுவே குழாய் பதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் வீணாக பாய்கிறது. மேலும், அந்த பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆ.நாகராஜன், ராஜாக்கமங்கலம்.

தெருவிளக்குகள் எரியவில்லை

பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட மார்த்தால் பகுதியில் நாராம்பிள்ளை காம்பவுண்டு செல்லும் சாலையில் தெரு விளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி மிகவும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி பழுதடைந்த தெருவிளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குகள் பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஹக்கீம், திட்டுவிளை.

காத்திருக்கும் ஆபத்து

சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்கு காந்தி மண்டபம் அருகே கடற்கரையில் ஒரு மின்இணைப்பு பெட்டியின் மூடி சேதமடைந்து திறந்தபடி மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் ஆபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, பேராபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்டவர்கள் மின்இணைப்பு பெட்டியை பாதுகாப்புடன் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், கன்னியாகுமரி.

தெருநாய்கள் தொல்லை

நாகர்கோவில்-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் பண்டாரபுரம் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இவை அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களை கடிக்க துரத்துகின்றன. மேலும் நாய்கள் வாகனங்களின் குறுக்கே பாய்வதால் இருச்சக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே சாலையில் சுற்றி திரியும் ெதருநாய்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-த.விஜேஷ், பண்டாரபுரம்.

தொற்றுநோய் பரவும் அபாயம்

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ராமன்புதூர் மணிவிலாஸ் 2-ம் தெருவில் கழிவுநீர் ஓடை உள்ளது. இந்த ஓடையை முறையாக தூர்வாராததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓடையை தூர்வாரி கழிவுநீர் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணி, நாகர்கோவில்.

மேலும் செய்திகள்