< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
22 Sep 2022 4:04 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டி

மின்கம்பம் மாற்றப்பட்டது

அகஸ்தீஸ்வரம் அருகே சுக்குப்பாறை தேரிவிளை காந்திநகர் பகுதியில் இருந்த மின்கம்பம் மிகவும் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் காணப்பட்டது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் நட்டனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

கழிவறையை சீரமைக்க வேண்டும்

ராஜாக்கமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட அளத்தங்கரை பகுதியில் பொது கழிவறை ஒன்று உள்ளது. இதை அந்த பகுதியை ேசர்ந்த ஏழை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது இந்த கழிவறை சேதமடைந்து உடைந்த நிலையில் காணப்படுகிறது. எனவே, இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, சேதமடைந்த கழிவறையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரெஜீஸ், அளத்தங்கரை.

வாகன ஓட்டிகள் அவதி

மார்த்தாண்டம் சந்திப்பு வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இங்கு மேம்பாலத்தின் அடிப்பகுதியில் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், போக்குவரத்து நெருக்கடியான நேரங்களில் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, சாலைய சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், கொடுங்குளம்.

தடுப்பு சுவர் வேண்டும்

கீழஆசாரிபள்ளத்தில் இருந்து பெரும்செல்வவிளைக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலையில் வெள்ளமண்ணோடை பகுதியில் ஆற்றின் குறுக்கே ஒரு சிறிய பாலம் உள்ளது. இந்த பாலத்தில் ஒரு பக்கமுள்ள தடுப்புசுவர் இடிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி பாலத்தில் தடுப்பு சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆன்டனி சதீஷ், ஆசாரிபள்ளம்.

செடிகளை அகற்ற வேண்டும்

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமவர்மபுரம் பழைய வங்கிகாலனி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள குப்பைகளை சேகரிக்க பணியாளர்கள் யாரும் வருவதில்லை. மேலும் இந்த பகுதியில் சாலையோரம் செடி, கொடிகள் வளர்ந்து புதர் காடாக மாறி வருகிறது. எனவே, செடிகளை அகற்றி சுகாதாரம் பேண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஜெயராம், ராமவர்மபுரம்.

குளம் தூர்வாரப்படுமா?

வில்லுக்குறி அருகே பொட்டரற்று குளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதியை ேசர்ந்த ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். மேலும், குளத்தில் உள்ள தண்ணீர் மூலம் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வந்தது. தற்போது இந்த குளம் பராமரிக்கப்படாமல் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. குளத்தின் மதகுகளும் பழுதடைந்து உள்ளன. குளத்தில் போதிய தண்ணீர் தேங்கி நிற்பதில்லை. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே குளத்தை தூர்வாரி பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அவானிஸ் ஆன்டனி ராய், வில்லுக்குறி.

மேலும் செய்திகள்