< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
18 Sep 2022 1:51 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டி

சாலை சீரமைக்கப்பட்டது

தோட்டியோடு பகுதியில் இருந்து திங்கள்சந்தை செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. இதனால் விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இந்த சாலைய சீரமைக்க வேண்டும் என பலதரப்பு மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியிலும் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து வருகிறார்கள். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

தேரூர் பேரூராட்சியில் எஸ்.பி. காலனி 14-வது தெருவில் மழைநீர் ஓடை இருந்தது. தற்ேபாது ஓடையை மண்ணால் நிரப்பி ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனால் மழை நீர் பாய்ந்து ெசல்லாமல் அருகில் உள்ள காலி மனையில் தேங்கி நிற்கிறது. அத்துடன் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மழைநீர் வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.அய்யப்பன், தேரூர்.

பஸ்கள் சீரமைக்கப்படுமா?

நாகர்கோவிலில் இருந்து ராஜாக்கமங்கலம், குற்றியாணி, கடியப்பட்டணம் போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. இரவில் இந்த பஸ்களில் மின்விளக்குகள் சரியாக எரிவதில்லை. மழைக்காலங்களில் பஸ்களின் மேற்கூரை ஒழுகுவதால் பயணிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே பயணிகள் நலன்கருதி பழைய பஸ்களை அகற்றிவிட்டு தரமான பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.மகேஷ், ராஜாக்கமங்கலம்.

சீரமைக்க வேண்டிய சாலை

தேங்காப்பட்டணம் தோப்பில் இருந்து அல்அமீன் பள்ளிக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் சாலையில் உள்ள பள்ளங்களில் தவறி விழும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. மேலும் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அபுதாய்ரு, குளச்சல்.

சுகாதார சீர்கேடு

குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட கீழ்பம்மம் பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் ெகாட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதி மினி குப்பை கிடங்கு போல் காட்சியளிக்கிறது. எனவே, சாலையோரம் உள்ள குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-எஸ்.முகமது சபீர், குளச்சல்.

பாழடைந்து வரும் கட்டிடம்

கொட்டாரம் பேரூராட்சி வளாகத்தில் ஒரு சமுதாய நலக்கூடம் உள்ளது. இது இப்போது பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லை. இந்த கட்டிடம் தற்போது பராமரிப்பு இன்றி சுவர்களும், காங்கிரீட் மேற்கூரையும் சேதமடைந்து பாழடைந்து வருகிறது. எனவே, சேதமடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய சமூக நலக்கூடம் கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சி.ராம்தாஸ், சந்தையடி.

மேலும் செய்திகள்