< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
2 Sep 2022 11:32 AM GMT

தினத்தந்தி புகார் பெட்டி

சாலையில் வீணாகும் குடிநீர்

சித்திரங்கோட்டில் இருந்து குலசேகரம் செல்லும் சாலையில் சாண்டம் என்ற பகுதியில் காங்கிரீட் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையின் அடியில் குழாய்கள் பதித்து பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் ெகாண்டு செல்லப்படுகிறது. தற்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் வீணாக பாய்கிறது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், சாலையில் ெசல்லும் வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுகிறார்கள். ஏனவே, குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுஜித், சாண்டம்.

துர்நாற்றம் வீசுகிறது

இடைக்கோடு பஞ்சாயத்தில் மேல்பாலை தபால் நிலையம் அருகே ரப்பர் ஷீட் அடிக்கும் எந்திரத்தில் இருந்து வெளியேறும் கழிவுகள் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சுகாதாரத்தை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவா, தேவிகோடு.

குடிநீர் தட்டுப்பாடு

ஆரல்வாய்மொழி அருகே உள்ள முப்பந்தல் மணியாநகர் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் பேரூராட்சி சார்பில் குடிநீர் இணைப்பு இதுவரை கொடுக்கப்படவில்லை. இதனால், இந்த பகுதியில் நிரந்தமாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இங்குள்ள பொதுமக்கள் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று சுத்தமாக குடிநீர் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது. எனவே, சுத்தமான குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-குணசேகர், மணியாநகர்.

அகற்ற வேண்டிய மரம்

அழகியமண்டபத்தில் இருந்து மேக்காமண்டபம் செல்லும் சாலையில் காட்டாத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரி அருகில் ஒரு பனைமரம் மிகவும் உயரமாக வளர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த மரத்தை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள், மின்கம்பிகள் உள்ளன. காற்றுமழைக்காலங்களில் மரம் முறிந்து விழுந்தால் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-ஆலிவர், அழகியமண்டபம்.

சுகாதார சீர்கேடு

காட்டாத்துறை ஊராட்சிக்கு உட்பட்ட சாமியார்மடத்தில் ஊரக தினசரி சந்தை உள்ளது. இந்த சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவறை சரியாக பராமரிக்கப்படாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, கழிவறைய சுத்தம் செய்து பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஆர். வசந்தகுமார், சாமியார்மடம்.

பகலில் ஒளிரும் விளக்கு

குளச்சல் நகராட்சி உட்பட்ட ஆசாத் நகர் பகுதியில் பல நாட்களாக பகல் நேரங்களில் தெருவிளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. இதனால், மின்சாரம் வீணாகுவதுடன் அந்த விளக்கு விரைவில் பழுதடைய வாய்ப்பு உள்ளது. எனவே, தெருவிளக்கை இரவில் எரிய வைத்து பகலில் அணைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-எஸ். முகமது சபீர், குளச்சல்.

மேலும் செய்திகள்