< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
29 Aug 2022 3:10 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டி

சுகாதார சீர்கேடு

தக்கலை அருகில் உள்ள பத்மநாபபுரத்தில் இருந்து சாரோடு வழியாக மேக்காமண்டத்திற்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலையில் வள்ளியாறு பாலத்தில் இருந்து நுள்ளிகுளம் வரை இருபுறமும் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளை இரவு நேரங்களில் கொட்டிவிட்டு செல்கிறார்கள். அவற்றை தெருநாய்கள் கடித்து குதறி சாலையில் போடுவதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, சாலைேயாரம் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-என்.குமார், நுள்ளிகுளம்.

உடைந்து வரும் கான்கிரீட்

கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரெயில் பாதையில் அஞ்சுகூட்டுவிளை என்ற ஊரில் தண்டவாளத்தின் குறுக்கே ஒரு மேம்பாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலிக்கு 4 வழிச்சாலை செல்கிறது. தற்போது பாலத்தின் மேல்பகுதியில் கான்கிரீட் சிறிது, சிறிதாக உடைந்து வருகிறது. இதனால், பாலத்தின் கம்பிகள் கொஞ்சம், கொஞ்மாக வெளியே தெரிகின்றன. கான்கிரீட் நாளுக்கு நாள் உடைந்து வருவதால் பாலம் விரைவில் சேதமடைய வாய்ப்பு உள்ளது. எனவே, இதை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சி. ராம்தாஸ், சந்தையடி.

சேதமடையும் மரத்தடிகள்

தும்பகோடு கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் அரசு புறம்போக்கு பகுதியில் வெட்டப்பட்ட அயனி மரத்தடிகள் கடந்த சில ஆண்டுகளாக குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த மரத்தடிகள் வெயிலினாலும், மழையில் நனைந்தும் நாளுக்கு நாள் சேதமடைந்து வருகின்றன. மேலும் மரத்தடிகளுக்கு இடைேய விஷப்பிராணிகள் பெருக வாய்ப்புகள் உள்ளன. எனவே, இவற்றை ஏலம் விட்டு அரசுக்கு வருவாய் ஏற்படுத்தவும், அலுவலக வளாகத்தை தூய்மையாக வைத்திருக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-தங்கராஜ், தும்பகோடு.

பஸ் இயக்கப்படுமா?

ராமன்துறையில் இருந்து நாகர்கோவிலுக்கு தடம் எண் 309இ பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் மூலம் கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மிகவும் பயனடைந்து வந்தனர். தற்போது இந்த பஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த பஸ்சை நம்பியிருந்த பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ரத்து செய்யப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இனபன்ட் தாஸ், இனயம்.

அலுவலகத்தை மாற்றக்கூடாது

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆளூரில் பழைய பேரூராட்சி அலுவலக கட்டிடத்தில் குடிநீர் கட்டணம், சொத்துவரி கட்ட வசதியாக மண்டல் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தை ஆசாரிபள்ளம் பெருவிளை பகுதியில் மாற்றுவதற்கு முயற்சிகள் நடைபெறுவதாக தெரிகிறது. அப்படி மண்டல் அலுவலகம் மாற்றப்பட்டால் ஆளூர், புன்னவிளை, சுங்கான்கடை, வீராணி, சரல்விளை, தோப்புவிளை, களியங்காடு, ஐக்கியபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, எனவே இந்த அலுவலகத்தை மாற்றும் முயற்சியை அதிகாரிகள் கைவிட வேண்டும்.

-வேணு, ஆளூர்.

சாலையை சீரமைக்க வேண்டும்

மார்த்தாண்டம் அருகே உள்ள கொல்லக்குளத்தில் இருந்து தச்சன்விளைக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான பொதுமக்கள் நடந்தும், வாகனங்களிலும் செல்கிறார்கள். தற்போது இந்த சாலை ஆங்காங்கே சேதமடைந்து மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், இருசக்கர வாகனங்களில் ெசல்கிறவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், மார்த்தாண்டம்.

மேலும் செய்திகள்