< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
26 Aug 2022 3:01 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டி

பட்ட மரம் அகற்றப்படுமா?

நாகர்கோவில் வடசேரி காணியாளன்புதுதெருவில் சாலையோரம் ஒரு பட்ட மரம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த வழியாக பொதுமக்களின் நடமாட்டமும், வாகனங்களின் போக்குவரத்தும் அதிகமாக இருக்கும். இந்தநிலையில் பட்ட மரத்தின் கிளைகள் அவ்வப்போது முறிந்து விழுந்த வண்ணம் உள்ளது. இதனால், அந்த தெருவில் செல்லும் மக்கள் ஒருவித அச்சத்துடன் செல்கிறார்கள். மரம் முறிந்து விழுந்து பேராபத்து ஏற்படும் முன்பு மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ், வடசேரி.

தெருவிளக்கு எரிகிறது

நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் கைலாஷ் கார்டன் 2-வது தெருவில் தெருவிளக்குகள் எரியாமல் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகளை எரிய வைத்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

நாய்கள் தொல்லை

பாலபள்ளம் பேரூராட்சிக்கு உட்பட்ட குறும்பனையில் உள்ள அந்தோணியார் தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருவில் சுற்றி திரியும் நாய்கள் சிறுவர்களையும், பெண்களையும் கடிக்க துரத்துகின்றன. இதனால் பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி தெருநாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜோய், குறும்பனை.

சாலையை சீரமைக்க வேண்டும்

வில்லுக்குறி அருகே மாம்பழத்துறையாறு அணை உள்ளது. இந்த அணை சுற்றுலா தலமாகும். இங்கு பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஆனால் வில்லுக்குறியில் இருந்து இந்த அணைக்கு செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், இங்கு வரும் சுற்றுலா பயணிகளும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

-கோ. ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி.

கால்வாயில் கலக்கும் கழிவுநீர்

மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆசாரிதெரு பகுதியில் ஒரு கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மற்றும் புதுக்கடைத்தெருவில் இருந்து வரும் கழிவுநீரும் கலக்கிறது. இதனால், கால்வாய் நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே, கால்வாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரின்ஸ், மணவாளக்குறிச்சி.

ஆபத்தான நிலையில் தெருவிளக்கு

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பீச்ரோடு, பாவலர்நகரில் உள்ள ஒரு மின்கம்பத்தில் தெருவிளக்கு தலைகீழாக தொங்கி கொண்டிருக்கிறது. அந்த பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். இந்தநிலையில், தொங்கி கொண்டிருக்கும் விளக்கு விழுந்து போராபத்து ஏற்படும் முன்பு அதை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிருஷ்ணபிள்ளை, பாவலர்நகர்.

சாலையில் பள்ளம்

சுசீந்திரத்தில் இருந்து ஒரு சாலை மருங்கூர் வழியாக நாகர்கோவில்- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையை வந்தடைகிறது. இந்த சாலையில் திருமலைபுரம் என்ற இடத்தில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் அடியில் தார் சாலையும், கான்கிரீட் சாலையும் இணையும் இடைவெளி நீண்ட பள்ளமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே, இந்த பள்ளத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சி.ராம்தாஸ், சந்தையடி.

மேலும் செய்திகள்