< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
20 Aug 2022 3:33 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டி

மின்கம்பம் மாற்றப்படுமா?

தோவாளை வடக்கூர், மாடன் தம்புரான் கோவில் தெருவில் உள்ள மின்கம்பத்தின் கொண்டை பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து, எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் உடைந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். எனவே மேலும் தாமதிக்காமல் மின்கம்பத்தை மாற்றி விட்டு புதிய கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ், வடக்கூர்.

விபத்தில் சிக்கும் அபாயம்

அழகிய மண்டபம்-குலசேகரம் சாலையில் ஆற்றூர் புளிமூடு சந்திப்பில் கடந்த மாதம் பெய்த மழையால் சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும். இல்லாவிட்டால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆ.மோகன்குமார், ஆற்றூர்.

சாலையில் பள்ளம்

தக்கலை மேட்டுக்கடையில் இருந்து பத்மநாபபுரம் செல்லும் தர்கா சாைலயின் ஒருபுறம் குடிநீர் குழாய் பதிப்பதற்காக ேதாண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படவில்ைல. இந்த நிலையில் மழை வெள்ளத்தில் மண் அடித்து சென்றதால், சாலையின் ஒரு பகுதி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் பள்ளமாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் ெசல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பள்ளத்தை நிரப்பி சாைலயை உடனே சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சித்திக், தக்கலை.

மக்கள் அவதி

திருவட்டார் ஊராட்சிக்கு உட்பட்ட அருவிக்கரை கிருஷ்ணன் கோவில் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. சமீபத்தில் சாலையில் காங்கிரீட் தளம் அமைத்தார்கள். அதை சிறிது தூரம் போட்டு விட்டு, முக்கால் பகுதியை அப்படியே விட்டு விட்டனர். இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையின் மற்ற பகுதியிலும் காங்கிரீட் தளம் அமைக்க ஊராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும்.

- சுப்பிரமணியன், அருவிக்கரை.

நடவடிக்கை எடுக்கப்பட்டது

ஆத்திக்காட்டுவிளை ஊராட்சிக்கு உட்பட்ட சாலை சந்திப்பு பகுதியில் கூட்டு குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. அந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி கழிவுநீர் ஓடையில் பாய்ந்து வந்தது. ஏற்கனவே 2 முறை அந்த இடத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சீரமைக்கப்பட்டது. மீண்டும் உடைப்பு ஏற்பட்டது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில், செய்தியும், படமும் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

கழிவு நீர் ஓடையில் அடைப்பு

நாகர்கோவில் டி.வி.டி.பள்ளி மெயின் ரோட்டில் பாதாளச்சாக்கடை பணிக்காக குழாய்கள் பதிக்கும் பணி நடந்தது. அப்போது மீதம் இருந்த குழாய் களை கழிவுநீர் ஓடையில் போட்ட தால் கழிவுநீர் செல்ல முடியாத அளவுக்கு அடைத்து உள்ளது. இந்த சாலை வழியாக பள்ளிக்கு ஏராளமான மாணவ-மாணவிகள் செல்கிறார்கள். எனவே கழிவுநீர் ஓடையில் கழிவு நீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுதன், சிதம்பரம் நகர்.

மேலும் செய்திகள்