< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
14 Aug 2022 8:36 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டி

சாலை சீரமைக்கப்படுமா?

தோட்டியோட்டில் இருந்து திங்கள்சந்தை செல்லும் சாலையில் பேயன்குழி பகுதியில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன் அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுபின், பேயன்குழி.

குளத்தை தூர்வார வேண்டும்

பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ஜீவாநகர் அருகில் சாட்டுபுதூர் குளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தி வந்தனர். ஆனால், குளத்தை முறையாக பராமரிக்காததால் ஆகாய தாமரை வளர்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி.

மின்விளக்கை மாற்ற வேண்டும்

தெரிசனங்கோப்பில் இருந்து தெள்ளாந்தி செல்லும் சாலையில் சுடுகாடு அமைந்துள்ளது. இந்த சுடுகாட்டின் அருகில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் விளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய விளக்கை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-திவ்யா, ெதள்ளாந்தி.

சுகாதார சீர்கேடு

நாகர்கோவில் மேலராமன்புதூரில் இருந்து சைமன்காலனிக்கு செல்லும் சாலையோரத்தில் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையை முறையாக பராமரிக்காததால் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, ஓடையை தூர்வாரி கழிவுநீர் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வினேஷ், மேலராமன்புதூர்.

நடவடிக்கை தேவை

குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட களிமார் பகுதியில் சாலையோரத்தில் ஒரு பழமையான மரம் உள்ளது. இந்த மரத்தின் கிளைகளுக்கு இடையே மின்கம்பிகள் செல்கின்றன. அந்த பகுதியில் காற்று பலமாக வீசும் போது உராய்வு காரணமாக தீவிபத்து ஏற்படுவதற்கோ அல்லது மின்கம்பி அறுந்து விழுவதற்கோ வாய்ப்புகள் உள்ளன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரக்கிளையை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அஹ்மத் கபீர், குளச்சல்.

எரியாத மின்விளக்கு

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட இளங்கடையில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் முன் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் இணைக்கப்பட்டுள்ள விளக்கு பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த விளக்கை அகற்றி விட்டு புதிய மின் விளக்கை பொருத்தி எரியவைக்க வேண்டும்.

-ஆன்றோ டெகோசிங் ராஜன், வேதநகர்.

மேலும் செய்திகள்