< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
25 Jun 2023 11:58 PM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பஸ்களை சரியான நேரத்தில் இயக்க கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், விஸ்வக்குடி, முகமதுபட்டிணம், பிள்ளையார்பாளையம் ஆகிய கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கிராமங்களுக்குள் தினமும் 5 முறை அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் மதியம் நேரத்தில் ஊருக்குள் வருவதில்லை. இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள், வெளியூர்களுக்கு செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், பிள்ளையார்பாளையம்.

வரத்து வாய்க்காலை சீரமைக்க வலியுறுத்தல்

பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகம் பின்புறம் தெப்பகுளம் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் மழை பெய்தால் பெரம்பலூர் பெரியஏரியில் இருந்து தண்ணீர் வரத்து வாய்க்கால் வழியாக வந்து தெப்பகுளம் நிரம்பி வழியும். இந்தநிலையில் வரத்து வாய்க்காலுக்கு தண்ணீர் வரும் வழியில் ஆங்காங்கே செடி, செடிகள் முளைத்து முட்புதர்கள்போல் காட்சியளிக்கிறது. இதனால் மழை பெய்தும் தண்ணீர் தெப்பகுளத்திற்கு செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி வீணாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

குண்டும், குழியுமான சாலை

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் தினமும் பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் பஸ் நிலையத்திற்கு உள்ளே நுழைவும் இடத்தில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் உள்ளே செல்லும் பஸ்கள் சிரமத்துடன் சென்று வருகிறது. மேலும், மழைகாலங்களில் இந்த குண்டும், குழியுமான இடத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்கால அடிப்படையில் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

தூங்க முடியாமல் அவதி

பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் எம்.எம்.நகர் உள்ளது. இங்கு இரவு நேரங்களில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகிறது. இதனால் இரவு வேலை முடிந் து மோட்டார் சைக்கிளில் செல்வோரை துரத்தி சென்று நாய்கள் கடிக்க வருகிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே தடுமாறி விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் நாய்கள் அதிக சத்தம்போடுவதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

பெரம்பலூர் மாவட்டம் எழுமூர் கிராமத்தில் அதிகமாக ஆடுகள் வளர்ப்பு தொழில் தொழில் செய்துவருகிறார்கள். இதை பாதிக்கும் வகையில் தெருநாய்கள் தினமும் ஆடுகளை கடித்து விடுகிறது. இதனால் சில ஆடுகள் இறந்து விட்டது. மேலும், இரவு நேரங்களில் நாய்கள் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரையும் துரத்தி கடிக்க வருகிறது. மேலும் மோட்டார் சைக்கிளில் செல்வோரையும், வாகன ஓட்டிகளையும் துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலகிருஷ்ணன். எழுமூர்.

மேலும் செய்திகள்