< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
21 Jun 2023 11:46 PM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பன்றிகளால் தொல்லை

பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலம் குடியிருப்பு பகுதியில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை கிளறி சாலையில் போடுவதினால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், துறைமங்களம்

பஸ் வசதி வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம்நூத்தப்பூர் கிராமத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பொதுமக்கள், அரசு அலுவலகங்கள, மாணவர்கள் கல்லூரிகளுக்கு சென்று வர குறித்த நேரத்திற்கு பஸ்கள் இல்லாமல் அவதிப்படுகின்றனர். இவ்வூர் பெரம்பலூர்-சின்ன சேலம் பிரதான சாலையிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் பெரம்பலூர் - கள்ளக்குறிச்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் நூத்தப்பூர் கிராமத்தை தவிர்த்து செல்லும் சூழல் உள்ளது. எனவே நூத்தப்பூர் மார்க்கமாக பஸ்சை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

இதழினியாள், நூத்தப்பூர்.

மின்சாதன பொருட்கள் பழுதடையும் அபாயம்

பெரம்பலூர் மாவட்டம், வரகூர் கிராமத்தில் பூங்கா நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு குறைந்த மின்னழுத்தத்துடன் மின்சாரம் வினியோகம் செய்யப்படுவதால் வீட்டு மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியாத நிலையும் அடிக்கடி பழுதுதடையும் நிலையும் வருகின்றது. எனவே இது குறித்து சம்மந்தப்படட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள். வரகூர்

பொதுக்கழிவறையை திறக்க கோரிக்கை

பெரம்பலூர் ஒன்றியம் வேலூர் ஊராட்சிக்கு உட்டப்பட்ட கீழக்கணவாய் கிராமத்தில் முல்லைநகர் பகுதியில் உள்ள பொதுக்கழிவறை கட்டிமுடிக்கப்பட்டு 4ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு வரவில்லை. இதனால் தற்போது பொதுக்கழிவறை மது பிரியர்களின் கூடாரமாக மாறி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பொதுக்கழிவறை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், கீழக்கணவாய்

மருத்துவக்கல்லூரி கட்டப்படுமா?

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள் பொதுமக்கள் யாரேனும் பெரிய விபத்து மற்றும் நோயில் சிக்கினால் திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டி உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறிய மருத்துவமனைகளே உள்ளன. எனவே பெரம்பலூரை மையமாக வைத்து மருத்துவக்கல்லூரி கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

மேலும் செய்திகள்