அரியலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி
அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் -தேளூர் ஆகிய 2 கிராம ஊராட்சிகளுக்கு உட்பட்டது வி. கைகாட்டி கிராமம் . இந்த வி. கைகாட்டி வழியாக தினமும் எண்ணற்ற லாரிகள் மற்றும் பல்வேறு கனரக வாகனங்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று வருகிறது. இந்நிலையில் வி. கைகாட்டியில் 24 மணி நேரமும் அதிகளவில் போக்குவரத்திற்கு இடையூறாகவும் ,இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விபத்துக்கள் ஏற்படுத்தும் விதமாக ஆங்காங்கே கூட்டம், கூட்டமாக மாடுகள் சுற்றி திரிகிறது. இதனால் வாகனங்களில் மாடுகள் மீதும் மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
பொதுமக்கள், வி.கைகாட்டி
சாலையோரம் கொட்டப்பட்ட களிமண்ணால் அவதி
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், பெரியகுறிச்சியில் இருந்து குழுழூர் செல்லும் சாலை விரிவாக்கத்தின்போது சாலையில் இருபுறமும் கிராவல் மண் அடிப்பதற்கு பதிலாக அருகில் உள்ள நிலத்தில் இருந்து களிமண்ணை எடுத்து சாலையின் இருபுறமும் போடப்பட்டுள்ளது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகனங்கள், ஒரு வாகனத்திற்கு மற்றொரு வாகனம் வழிவிடும்போது இந்த மண்ணில் இறங்கும்போது வழுக்கி விபத்துஏற்பட்ட வாய்ப்பு உள்ளத. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரி செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
முடிமன்னன், பெரியகுறிச்சி.
தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
அரியலூர் கோட்டாட்சியர் முகாம் அலுவலகம் ரூ. 80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. தற்போது அலுவலகம் முன்பு கழிவுநீர் செல்ல வழியில்லாமல் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பே்பககுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், அரியலூர்.
மரக்கன்றுகள் நட கோரிக்கை
அரியலூர் மாவட்டம், ஆனை வாரி ஒடை 30 கிலோமீட்டர் தூரம் சென்று வெள்ளாறில் கலக்கிறது. இதனால் வாரி ஓடையின் இருகரையும் இதன் இருகரையும் பலப்பட்டுள்ளது. எனவே இருகரையிலும் அரசு, வேம்பு, பனை, தென்னை , அத்தி, போன்ற பல்வேறு மரக்கன்று கள் நடவு செய்து சுற்று சூழைல பாதுகாக்கவும், மண் அரிப்பு தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராவணன், குடிக்காடு
கருவேலை மரங்கள் அகற்றப்படுமா?
அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பஞ்சாயத்தல் மு.புத்தூர், முனியங்குறிச்சி கிராமங்கள் உள்ளன. இதில் மு.புத்தூர் கிராமத்தில் இருந்து முனியங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வரை சாலையின் இருபுறமும் போக்கு வரத்திற்க்கு இடையூறாக அதிக அளவில் கருவேல மரங்கள் வளர்ந்து சாலையினை ஆக்கிரமித்துள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்ந்தப்பட்ட அதிகாரிகள் கருவேல மரங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், முனியங்குறிச்சி.