< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
7 Jun 2023 11:58 PM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

பெரம்பலூர் செட்டிக்குளம் கிராமத்தில் உள்ள பஸ் நிலையத்தில் இருந்து ஆலத்தூர் கேட் செல்லும் சாலை, பெரம்பலூர் மற்றும் திருச்சி செல்லும் சாலைகளில் இருபுறமும் சிலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை வைத்துள்ளனர். இதனால் சாலையில் வாகனங்கள் சென்று வர முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டு கொள்கிறோம்.

ெபாதுமக்கள், செட்டிக்குளம்

குண்டும், குழியுமான சாலை

பெரம்பலூர் நொச்சியம் கிராமத்திற்குள் செல்லும் தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் நடந்து செல்லவே பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ெபாதுமக்கள், நாரணமங்கலம்

குவிந்து கிடக்கும் குப்பைகள்

பெரம்பலூர் நகரப்பகுதியில் ஆங்காங்கே சேகரிக்கப்படும் குப்பைகள் சாலையோரம் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் குப்பைகள் முறையாக அள்ளப்படாததால் மலை போல் குவிய தொடங்கி உள்ளது. இதனால் தூர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை முறையாக அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்

நாய்கள் தொல்லை

பெரம்பலூர் ரோஸ் நகர் பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை பின்னால் துரத்தி வந்து கடிக்க பாய்கிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், முதியவர்களும் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்

பன்றிகளால் தொல்லை

பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலம் குடியிருப்பு பகுதியில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை கிளறி சாலையில் போடுவதினால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததுடன், நோய் தொற்று ஏற்படும் அபாயமும் நிலவி வந்தது. இதுகுறித்து தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியிட்ட பிறகு இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், துறைமங்கலம்

மேலும் செய்திகள்