< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
1 Jun 2023 12:29 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஏரியை சீரமைக்க கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் கிராமத்தில் ஏரியில் ஒன்று உள்ளத. இதனால் மழைக்காலங்களில் ஏரியில் நீரை சேமித்து வைக்கின்றனர். பின்னர் நீரை அருகில் உள்ள விலை நிலங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ஏரியில் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சிளிக்கிறது. இதனால் நிலத்தடி நீர் குறையும் அபாயம் உள்ளது. எனவே ஏரியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், செட்டிகுளம்.

குடிநீர் தட்டுப்பாட்டரல் அவதி

பெரம்பலூர் மாவட்டம் உன் மங்கூன் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இப்பகுதி பொதுமக்களுக்கு தினமும் குடிநீர் குறைவாக வருகிறது. இதனால் கடும் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீரை காசு கொடுத்து வாங்கி பருகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பநந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வே்டும் என அப்பகுதி பொதமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் தேனூர் கிராமத்தில் பல்வேறு இடங்களில் கருவேல மரங்கள் ஏராளமானவை வளர்ந்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கடும் தண்ணீர் தட்டுப்பாட்டு உள்ளது. இதனால் கால்நடைகள் கூட தண்ணீர் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஅப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நவீன்,தேனூர்

சாலையை சீரமைக்கப்படுமா?

பெரம்பலூர் 4 ரோடு மின்சாரம் அலுவலகம் முன்பு சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் அந்த பகுதியில் பாலம் போடப்பட்டது. இதனால் தெருவில் சாலைகள் தோண்டப்பட்டது. ஆனால் தற்போது சாலை சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந் வருகின்றனர். மேலும் சாலை சேறும், சகதியுமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

பன்றிகளால் தொல்லை

பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலம் குடியிருப்பு பகுதியில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை கிளறி சாலையில் போடுவதினால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததுடன், நோய் தொற்று ஏற்படும் அபாயமும் நிலவி வந்தது. இதுகுறித்து தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியிட்ட பிறகு இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் ஒரு மாதம் கடந்த நிலையில் மீண்டும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், துறைமங்கலம்

மேலும் செய்திகள்