< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
28 May 2023 9:24 PM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தெருநாய்கள் தொல்லை

அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்க வருகிறது. இதனால் அவர்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் முதியவர்களை தெருநாய்கள் கடிக்க வரும்போது அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், செந்துறை.

வரத்து வாய்க்காலை சீரமைக்க கோரிக்கை

அரியலூர் சித்தேரிக்கு வரும் வரத்து வாய்க்காலில் ஆகாயத்தாமரைகள் ஏராளமானவை வளர்ந்துள்ளது. மேலும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக தேங்கி கிடக்கிறது. இதனால் மழை காலங்களில் வரத்து வாய்க்கால் வழியாக தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரத்து வாய்க்காலை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், அரியலூர்.


மேலும் செய்திகள்