< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திருச்சி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
28 May 2023 9:22 PM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

நோய் பரவும் அபாயம்

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் பேரூராட்சி 15-வது வார்டு இந்திரா நகரில் சாலை சீரமைப்பு பணியின்போது வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைக்கப்பட்டதால் தண்ணீர் வெளியேறி வருகிறது. மேலும், அரை அடி உயரத்தில் குடிநீர் குழாய்கள் இருப்பதால் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்கும் பொழுது தண்ணீர் வீணாகி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், உப்பிலியபுரம்.

கழிவறைகளை சுத்தம் செய்ய கோரிக்கை

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், கணபதிபாளையம் பகுதியில் ஆண்டுகளுக்கான கழிவறைகள் உள்ளது. இங்கு தண்ணீர் வசதியில்லாததால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் கழிவறைகளை பயன்படுத்த முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவறைகளுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கணபதிபாளையம்.

குரங்குகள் தொல்லை

திருச்சி மாவட்டம், திருப்பட்டுர் கிராமத்தில் பிரம்மா கோவில் உள்ளது. இங்கு வெளியூர்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகிறது. இந்த குரங்குகள் கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடைமைகள் மற்றும் பொருட்களை பிடுங்கி செல்கிறது. மேலும் குழந்தைகள் கையில் வைத்திருக்கும் திண்பண்டங்களை பிடுங்குகிறது. மேலும் சில நேரங்களில் பொதுமக்களை பரண்டி காயமும் படுத்தி வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பக்தர்கள், திருப்பட்டூர்.

வீணாகும் குடிநீர்

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கடந்த 15 நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கணேசன், மணப்பாறை.

குண்டும், குழியுமான சாலை

திருச்சி மாவட்டம், பெரகம்பி கிராமத்தில் உள்ள காண்ணப்பாடி வழியாக துறையூர் செல்லும் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது அந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் நிலைடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் நடந்து செல்வே பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பெரகம்பி.

மேலும் செய்திகள்