< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
28 May 2023 9:21 PM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான சாலை

பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம்-காரை செல்லும் தார்சாலை சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் நிலைடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் நடந்து செல்வே பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாரணமங்கலம்.

தெருவிளக்கை சரி செய்ய கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம், சாத்தனூர் கிராமத்தில் தெரு விளக்குகள் இரவு நேரங்களில் சரியாக எரிவதில்லை. இதனால் வெளிச்சம் குறைவாகவே உள்ளது. இதனால் இரவு நேரங்களில் தெருக்களில் நடந்து செல்ல பொதுமக்கள், முதியவர்கள், பெண்கள் கடும் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், சாத்தனூர்.

குடிநீர் வசதி வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம், டி.களத்தூர் கிராமத்தில் குடிநீர் குழாயில் தண்ணீர் குறைவாகவே வருகிறது. இதனால் குடிநீர் சரியாக கிடைக்காமல் காசு கொடுத்து வாங்கி பருகும் நிலை உள்ளது. இதனால் தண்ணீருக்காக ஒரு தொகையை ஒதுக்க வேண்டியது உள்ளது. தற்போது வெயில் காலம் என்பதால் தண்ணீர் அதிகம் தேவைப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிக நேரம் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், டி.களத்தூர்.

வாகன ஓட்டிகள் அவதி

பெரம்பலூர் மாவட்டம், தெரணி கிராமத்தில் காரை- தெரணி செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் நிலைடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் நடந்து செல்வே பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தெரணி.

மருதையாற்றை விரைந்து சீரமைக்க கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள பச்சை மலைத்தொடரில் உற்பத்தியாகி மாவட்டத்தின் பெரம்பலூர், வேப்பூர், ஆலத்தூர் ஒன்றியங்களை இணைக்கும் வகையில் பாய்ந்தோடி அரியலூரில் நுழைந்து கொள்ளிடத்தில் மருதையாறு கலக்கிறது. மருதையாற்றின் பனங்கூர், குரும்பாபாளையம் பகுதிகளில் நிறைய சீமைக்கருவேல மரங்கள், சம்பு உள்ளிட்டவைகள் முளைத்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஆறு மற்றும் மக்களின் நலன் கருதி விரைந்து மருதையாற்றை சீரமைக்க நீர்வளம்தைப் பெருக்கும் முனைப்போடு செயல்படும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் விரைந்து ஆவண செய்யக் கோருகிறோம்.

பொதுமக்கள், குரும்பாபாளையம்

மேலும் செய்திகள்