< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கரூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
17 May 2023 6:23 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா?

கரூர் மாவட்டம், நன்செய் புகழூர், தவிட்டுப்பாளையம் பகுதியில் ஏராளமான வீடுகள், கடைகள் உள்ளன. ஆனால் தார் சாலையில் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் கட்டப்படவில்லை. தேசிய நெடுஞ்சாலையின் இரண்டு பகுதிகளிலும் மழைநீர் வடிகால் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக மழைநீர் வீட்டிற்குள்ளேயும், ஊருக்குள்ளும் புகுந்து செல்வதால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நீலகண்டன், தவிட்டுப்பாளையம்.

தூர்வாரப்படாத கால்வாய்

கரூர் மாவட்டம், குளத்துப்பாளையம் பகுதியில் விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்லும் வகையில் உபரி நீர் கால்வாய் வெட்டப்பட்டுள்ளது. இந்த உபரிநீர் கால்வாயில் ஏராளமான செடி, கொடிகள் முளைத்துளதூர்வாரப்படாத கால்வாய்

்ளன. இதனால் இந்த கால்வாய் வழியாக உபரிநீர், மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. மேலும் கனமழை பெய்யும் போது அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வடிகால் வாய்க்காலை முறையாக தூர்வாரி கரையை பலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இலக்கியா, குளத்துப்பாளையம்.

பயனற்ற எரிவாயு மயானம்

கரூர் மாவட்டம் புன்செய் புகழூர், காகித ஆலை, தோட்டக்குறிச்சி ஆகிய பேரூராட்சிகள், வேட்டமங்கலம், புன்னம், திருக்காடுதுறை, என்.புகழூர், கோம்புப்பாளையம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த இறந்தவர்களை எரிப்பதற்காக பேச்சிப்பாறை சுடுகாட்டில் நவீன எரிவாயு மயானம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த மயானம் நீண்ட ஆண்டுகளாக செயல்பட்டு வந்ததன் காரணமாக எரிவாயு மயானத்தில் இருந்த எந்திரங்கள் பழுதடைந்து சுமார் 3 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாடற்று இருந்தது. பின்னர் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு சுமார் ரூ.28 லட்சம் செலவு செய்யப்பட்டு எரிவாயு மயானம் பயன்பாட்டிற்கு விட தயாராக இருந்து வருகிறது. இருப்பினும் எரிவாயு மயானம் சீரமைத்து சுமார் ஓராண்டு ஆகியும் இதுவரை பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

முத்துவேல், புன்செய் புகழூர்.

ஆபத்தான மின்மோட்டார் அறை

கரூர் மாவட்டம், குளத்துப்பாளையத்தில் இருந்து வேட்டமங்கலம் செல்லும் சாலையில் வேட்டமங்கலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் அருகே மின் மோட்டார் அறை கட்டப்பட்டு அதன் மூலம் நீரேற்றப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த மின்மோட்டார் அறை கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. மின்மோட்டார் அறை தார் சாலை ஓரத்தில் உள்ளதால் பொதுமக்கள் நமாட்டத்தின்போது இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அம்ஷாமேரி, குளத்துப்பாளையம்.

மேலும் செய்திகள்