திருச்சி
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வடிகால் வசதி வேண்டும்
திருச்சி அண்ணாநகர் முதல் தெரு தென்னூர் பகுதி 21-வது வார்டில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வயில்லாமல் சாக்கடையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் செல்ல வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தென்னனூர்.
குண்டும், குழியுமான சாலை
திருச்சிராப்பள்ளி மாவட்டம், எடமலைப்பட்டி கடைவீதிக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் இங்குள் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது மழை பெய்து வருதால் சாலை தெரியாத அளவிற்கு ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் நடந்து செல்வோர் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனேவ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாகுல் ஹமீது, எடமலைப்பட்டி புதூர்.
பாதாள சாக்கடை வசதி வேண்டும்
திருச்சி மாநகராட்சி அரியமங்கலம், அம்மாகுளம் 3-வது தெரு மேற்கு பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்குள்ள சில வீடுகளுக்கு இன்னும் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தி கொடுக்கவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முஸ்தப்பா அம்மாக்குளம்,
வீணாகும் குடிநீர்
திருச்சி மாவட்டம், மலையடிப்பட்டி கிராமம் மலைத்தாதம்பட்டி ரெயில்கேட் அருகே காவிரி குடிநீர் குழாய் உடைந்து கடந்த 15 நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் கிடைப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் நீர் குளம்போல் தேங்க நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கணேசன், ஆவாரம்பட்டி.
சாலையோரம் கிடக்கும் ஊர் வழிகாட்டி பெயர் பலகை
திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் பிராதன சாலையோரம் திருவானைக்காவல் செல்லும் வழி என்ற ஊர் பெயர் பலகை அப்பகுதியில் சாலையோரம் குப்பையில் கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் திருவானைக்காவலுக்கு எந்த வழியாக செல்ல வேண்டும் என தெரியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊர்பெயர் பலகையை எடுத்து சரியான இடத்தில் வாகன ஓட்டிகள் பார்ப்பது போல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னளர்.
பொதுமக்கள், திருவானைக்காவல்