< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
10 May 2023 11:53 PM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேறும் சகதியுமாக மாறிய சாலை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பஸ் நிலையத்திற்கு தினமும் 30-க்கும் மேற்ப்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ்நிலையத்தை சுற்றி கடைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. ஆனால் பஸ் நிலைய உட்பகுதி சாலை குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது மழை பெய்து வருதால் பஸ் நிலையத்திற்குள் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும் சாலை சேறும் சகதியுமாக மாறி உள்ளதால் பயணிகள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரைமக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கறம்பக்குடி.

குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வருமா?

புதுக்கோட்டை மாவட்டம், கந்தவர்கோட்டை தாலுகா கண்ணுக்குடிப்பட்டி கிராமத்தில் குடிநீர் தொட்டி ஒன்று கட்டப்பட்டது. இந்த தொட்டியில் இருந்து அப்பகுதி பொதுமக்களுக்கு நீண்ட நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தனர். இந்தநிலையில் அந்த குடிநீர் தொட்டியை தனிநபர் ஆக்கிரமித்து வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் குடிநீர் தொட்டி பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கண்ணுக்குடிப்பட்டி.

பூங்கா திறக்க கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், அசோக் நகர் அருகே தமிழ் நகரில் ரூ.45 லட்சம் செலவில் பூங்கா ஒன்று கட்டபட்டுள்ளது. தற்போது பூங்கா திறக்கப்படாமல் காட்சி பொருளாக உள்ளது. இதனால் அந்த பூங்காவில் செடி, செடிகள் வளர்ந்து முட்புதர்போல காட்சியளிக்கிறது. மேலும் அப்பகுதி உள்ள ஆடு, மாடுகள் பூங்காவிற்கு உள்ளே சென்று அங்குள்ள புற்களை தின்று வருகிறது. எனவே பூங்காவை சீரமைத்து பொதுமக்கள் திறந்து விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

பொதுமக்கள், புதுக்கோட்டை.

வாகன ஓட்டிகள் அவதி

புதுக்கோட்டை நகராட்சி சந்தைப்பேட்டை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலை கடந்த 8 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் நடந்து செல்வோர் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனேவ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், சந்தைப்பேட்டை.

தெருவிளக்கு வசதி வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அண்ணா நகரில் இருந்து காமராசபுரம் செல்லும் சாலையில் தெருவிளக்கு ஒன்று உள்ளது. இந்தநிலையில் கடந்த பல மாதங்களுக்கு முன்பு மின்கம்பம் வழியாக செல்லும் மின்கம்பி அருந்து விழுந்தது. இதனால் அந்த பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், முதியவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுப்பையா, அரிமளம்.

மேலும் செய்திகள்