< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
8 May 2023 12:26 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனை

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு டாஸ்மாக்கடை அருகே காலை நேரத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடக்கிறது. இதனால் காலை நேரங்களில் மதுப்பிரியர்கள் மது வாங்கி குடிக்கின்றனர். இதனால்இதனால் அந்த வழியாக விளை நிலங்களுக்கு செல்லும் பெண்கள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே சட்ட விரோதமாக நடக்கும் மது விற்பனையை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

பொதுமக்கள், பாளையம்.

குரங்குகள் தொல்லை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெம்பாவூர், வடகரை ஆகிய ஊர்களுக்கு இடையில் ஆறு ஒன்று உள்ளது. இந்த ஆற்றின் கரைப்பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றனர். இந்த குரங்குகள் அனைத்தும் வீடுகளுக்குள் புகுந்து அங்குள்ள சமையல் பொருட்கள் மற்றும் தின்பண்டங்களை எடுத்துச்சென்று விடுகின்றது. மேலும் கடைகளில் உள்ள பொருட்களை எடுத்துச்சென்று விடுகின்றது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வெம்பாவூர்.

பள்ளத்தை மூட கோரிக்கை

பெரம்பலூர் அருகே குரும்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே சாலையோரத்தில் தோண்ட பள்ளம் இன்னும் மூடப்படாமல் உள்ளது. மேலும் அதன் அருகே முன்னெச்சரிக்கை பதாகைகள் எதுவும் வைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தவறி விழும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பள்ளத்தை மூட உடனடிாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமகக்ள், குரும்பலூர்.

வாகன ஓட்டிகள் அவதி

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பேரளி கிராத்தில் இருந்து பனங்கூர் கிராமம் வரை சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராயப்பன், மருவத்தூர்.

சரியான நேரத்தில் பஸ் இயக்கப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூர் கிராமத்திற்கு தினமும் 3 தடவை அரசு பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படுவதில்லை. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் ஊருக்குள் வரும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே காலை, மாலை என குறிப்பிட்ட நேரங்களில் பிரித்து சரியான நேரத்தில் அரசு பஸ்சை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமகக்கள், மருவத்தூர்.

மேலும் செய்திகள்