திருச்சி
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கிரிவல பாதையில் மின்விளக்குகள் பொருத்தப்படுமா?
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே அமைந்துள்ளது பெருமாள் மலை. ஒவ்வொரு சித்ரா பவுர்ணமியன்றும் பெருமாள் மலையை சுற்றி உள்ள பக்தர்கள் கிரிவலம் சென்று வருகிறார்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலம் பாதையில் பாதை முழுவதும் மின்விளக்கு வசதிகள் இல்லை. இதனால் மாலை நேரங்களில் இருட்டும்போது பக்தர்கள் தங்கள் கைகளில் உள்ள கைப்பேசி ஒளிரும் விளக்கு கொண்டு கிரிவலப் பாதையில் நடந்து வருகிறார்கள். தெரு மின் விளக்கு வசதிகள் இல்லாததால் கிரிவலம் நடந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்விளக்குகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், துறையூர்.
குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாநகராட்சி 38-வது வார்டில் பாரிநகரிலிருந்து அண்ணாநகர் வழியாக காமராஜர் நகர் வரை செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் மழை காலங்களில் அந்த சாலை சேறும் சகதியுமாக மாறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அப்துல் ரகுமான், காட்டூர்
நிழற்குடை சீரமைக்கப்படுமா?
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வழியாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சமயபுரம் பஸ் பயணிகள் நிழற்குடையில் இருக்கைகள் அனைத்தும் சேதம் அடைந்து உள்ளது. மேலும், அங்குள்ள குடிநீர் தொட்டியிலும் தண்ணீர் வரவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழற்குடையின் இருக்கைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெதுமக்கள், சமயபுரம்.
பக்தர்கள் அவதி
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் 3-வது வார்டு கிழக்கு வாசல் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெரு விளக்கு ஒன்று இரவு நேரங்களில் சரியாக எரிவதில்லை. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், பெண்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு விளக்கினை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலு, ஸ்ரீரங்கம்
அடிப்படை வசதிகள் வேண்டும்
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், நெய்வேலி கிராமத்தில் அரசு ஆரம்ப துணை சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு எந்த அடிப்படை ஒரு அடிப்படை வசதியும் இல்லை. இதனால் சுகாதார மையத்திற்கு வரும் பொதுமக்கள், நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அடிப்படை வசதியை செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சூர்யா, நெய்வேலி.