< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திருச்சி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
3 May 2023 11:34 PM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

நோயாளிகள் அவதி

திருச்சி மாவட்டம், லால்குடி அன்பில் செல்லும் சாலையில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் வளாகத்தின் முன்பு குப்பைகள் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. இதனால் அ ந்த வழியாக நடந்து செல்லும் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், லால்குடி.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், பச்சபெருமாள்பட்டி ஊராட்சி, தங்கநகர், குண்டக்கல் பகுதிகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் டப்பாக்கள், குப்பைகள் அப்பகுதியில் உள்ள பிரதான சாலையின் ஓரத்திலுள்ள வனத்துறையினருக்கு சொந்தமான பகுதிகளில் கொட்டப்படுகிறது. தற்போது மழை காலம் என்பதால் மழைநீருடன் குப்பைகளும் சேர்ந்து மீண்டும் குடியிருப்பு பகுதிக்கே வரும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை உடனடியாக அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தங்கநகர்.

புதைந்து கிடக்கும் அடிபம்பு

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி, தெற்கு விஸ்வாம்பாள் சமுத்திரத்தில் பிரதான சாலையோரத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக அடிபம்பு ஒன்று அமைக்கபட்டது. இந்த நிலையில் அந்த பகுதியில் சாலை பணியின்போது அடிபம்பை சுற்றி மண் நிரப்பியதால் தற்போது அடிபம்பு பயன்பாடு இல்லாமல் புதைந்து கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வினோத்குமார், தெற்கு விஸ்வாம்பாள்சமுத்திரம்.

நாய்கள் தொல்லை

திருச்சி உறையூர் 10-வது வார்டு டாக்டர் பங்களா 2-வது தெருவில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை பின்னால் துரத்தி வந்து கடிக்க பாய்கிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், முதியவர்களும் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் சுற்றிதிரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பிரபுவேல், உறையூர்.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா, லிங்கம்பட்டி கிராமத்தில் ஒரு மின்கம்பி தாழ்வாக செல்கின்றன. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர். எனவே தாழ்வாக செல்லும் மின்கம்பியை உடனடியாக சரிசெய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதியழகன், லிங்கம்பட்டி.

மேலும் செய்திகள்