< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
1 May 2023 12:38 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தெருநாய்களால் தொல்லை

அரியலூர் நகரப்பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை தெருவில் நடந்து செல்லும் குழந்தை கள், பெண்களை கடிக்க வருகிறது. மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை கடிக்க வருவதினால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அரியலூர்.

சாலை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

அரியலூர் மாவட்டம், முள்ளுக்குறிச்சி பகுதியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி குடிநீர் குழாய்கள் சேதமடைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், முள்ளுக்குறிச்சி.

குளம் தூர்வாரப்படுமா?

அரியலூர் மாவட்டம், உஞ்சினி வடக்கு தெருவில் பழமையான குளம் உள்ளது. இந்த குளம் அப்பகுதி மக்களின் குளிப்பதற்கும், கால்நடைகளின் குடிநீர் தேவைகளையும் பூர்த்தி செய்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் குளத்தில் ஆகாயத்தாமரை வளர்ந்தும், பாசிகள் பிடித்தும் யாருக்கும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே அந்த குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் உஞ்சினி.

சாலை சீரமைக்கப்படுமா?

அரியலூர் மாவட்டம், செந்துறை மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற பழமையான சிவதாண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் சாலை கடந்த பல மாதங்களுக்கு முன்பு மழையால் மிகவும் சேதமடைந்தது. அங்கே இருந்த பாலமும் சேதமடைந்தது. இந்த நிலையில் அப்பகுதியில் புதிய கல்வெட்டு பாலம் அமைக்கப்பட்டபோது அந்த சாலை பாலப்பணிகள் செய்தபோது கொண்டு வந்த கருங்கற்களால் மேலும் சேதம் அடைந்தது. ஆனால் அந்த சாலையை இதுவரை சீரமைக்கவில்லை. இதனால் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், செந்துறை.

மேலும் செய்திகள்