< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
6 April 2023 12:08 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கால்நடைகளால் தொல்லை

பெரம்பலூர் பஸ் நிலையம் மற்றும் கடைவீதி பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நாய், மாடு, குதிரைகள் ஏராளமானவை சுற்றித்திரிகிறது. இந்த கால்நடைகளால் போக்குவரத்திற்கு கடும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களை நாய்கள் துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. இதனால் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

தடுப்புச்சுவர் அமைக்க வேண்டுகோள்

பெரம்பலூர் டவுனில் இருந்து எளம்பலூர் புறவழிச்சாலை முதல் சென்னை பைபாஸ் சாலை வரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக சாலை அமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது. பின்னர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளி முகப்பு முதல் ரோவர் நூற்றாண்டு சாலை வரை புதிதாக சாலை மேம்படுத்தப்பட்டு சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு தெருவிளக்குகள் வைக்கப்பட்டது. இதனால் தற்போது சாலையில் போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது. தற்போது எளம்பலூர் ஏரிக்கரை அருகே வளைவுகள் நேர்படுத்தப்பட்டு வருகிறது. எனவே ரோவர் நூற்றாண்டு சாலையை போல ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளி முகப்பு முதல் உப்பு ஓடை வரை சாலையை அகலப்படுத்தி சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைத்து தெருவிளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

குண்டும், குழியுமான சாலைகள்

பெரம்பலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் பின்புறம் எம்எம்.நகர் பகுதியில் ஏராளமான சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்லவே முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

தடையின்றி கிடைக்கும் புகையிலை பொருட்கள்

பெரம்பலூரில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சில கடைகளில் மறைத்து வைக்கப்பட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தடையின்றி புகையிலை பொருட்கள் கிடைத்து வருவதால், அதனை பயன்படுத்துவோர் தொடர்ந்து பயன்படுத்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

மேலும் செய்திகள்