அரியலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மது விற்பனை தடுக்கப்படுமா?
அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்கப்படுகிறது. இதனால் பலர் குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் பிரச்சினை செய்து வருகின்றனர். குறிப்பாக கோவில்பாளையம் பகுதியில் அதிகளவில் மது விற்பனை நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், செந்துறை.
மணல் அள்ளப்படுவது தடுக்கப்படுமா?
அரியலூர் மாவட்டம். செந்துறை வட்டம் தளவாய் வடக்கு சிலூப்பணூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இங்குள்ள வெள்ளாற்றில் சிலர் அனுமதியின்றி மணல்களை அள்ள வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
பொதுமக்கள், சிலூப்பணூர்