< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
30 March 2023 12:09 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளம் கிராமத்தில் உள்ள பஸ் நிலைத்தில் இருந்து ஆலத்தூர் கேட் செல்லும் சாலை, பெரம்பலூர் மற்றும் திருச்சி செல்லும் சாலைகளில் இருப்புறமும் சிலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை வைத்துள்ளனர். இதனால் சாலையில் வாகனங்கள் சென்று வர முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், செட்டிக்குளம்.

குப்பைகளை முறையாக அள்ள வேண்டும்

பெரம்பலூர் நகரப்பகுதியில் ஆங்காங்கே சேகரிக்கப்படும் குப்பைகள் சாலையோரம் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் குப்பைகள் முறையாக அள்ளப்படாததால் தற்போது மலை போல் குவிய தொடங்கி உள்ளது. இதனால் தூர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை முறையாக அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

பொதுமக்களுக்கு இடையூறு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம் வ. கீரனூர் கிராமத்தில் தெருக்களில் தினமும் ஏராளமானவர்கள் கூடி உற்கார்ந்து கொண்டு பணம் வைத்து சூதாடி வருகின்றனர். இதனால் அந்த வழியாக பொதுமக்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட போலீசார் இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், வ.கீரனூர்.

ஊர் பெயர் பலகை வைக்கப்படுமா?

பெரம்பலூர், ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட சிறுவயலூர் ஊராட்சி பழைய விராலிப்பட்டி கிராமத்திற்கு செல்லும் நுழைவு பகுதியில் ஊரின் பெயர் பலகை இதுவரை வைக்கவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து கிராமத்திற்கு வரும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஊர் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், பழைய விராலிப்பட்டி

கலங்கலாக வரும் குடிநீர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வி.களத்தூர் கிராம ஊராட்சிக்குட்பட்ட மேட்டுச்சேரி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஏரி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் குடிநீர் சுத்தமாக இல்லாமல் கலங்கலாக வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அதனை பயன்படுத்த முடியவில்லை. இதுகுறித்து புகார் கொடுத்தும், மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மேட்டுச்சேரி.

மேலும் செய்திகள்