< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திருச்சி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
23 March 2023 12:22 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ரெயில்நிலையம் மேம்படுத்தப்படுமா?

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு வெளிநாட்டினர் உள்பட பலர் தினமும் வருகை தருகின்றனர். இங்குள்ள ஶ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் 4 நடைமேடைகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. 24 பெட்டிகள் கொண்ட ரெயில்கள் நிற்கும் நடைமேடையில் ஆறு இடங்களில் மட்டுமே சிறிய அளவில் மேற்கூரை போடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் வெயில் மற்றும் மழை காலத்தில் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபற்றி ரெயில்வே துறையினர் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஶ்ரீரங்கம்.

சாக்கடை மூடிகள் சரிசெய்யப்படுமா?

திருச்சி மாவட்டம், ச.கண்ணூர் பேரூராட்சிக்குட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலைகளில் பாதாள சாக்கடைகள் ஏராளமாக உள்ளன. இந்த பாதாள சாக்கடைகளின் மூடிகள் மேலே தூக்கிய நிலையில் உள்ளது. இதனால் சாலைகளில் நடந்து செல்வோர், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், சமயபுரம்.

ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும்

மண்ணச்சநல்லூர் தாலுகா, பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை. இதனால் கர்ப்பிணி பெண்கள், உடல்நலம் முடியாதவர்கள் சிகிச்சை பெற வேண்டும் என்றால் இங்கிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இருங்களூர் கிராமத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் இங்கு சென்று வர பஸ் வசதிகளும் இல்லை. எனவே இந்த பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

விக்னேஷ்வரன், பிச்சாண்டார்கோவில்.

100 நாள் வேலை முறைப்படுத்தப்படுமா?

ஸ்ரீரங்கம் தாலுகா, முத்தரசநல்லூர் பஞ்சாயத்தில் 100 நாள் வேலையில் வாரந்தோறும் சிலருக்கு வேலை இல்லை என்று அனுப்பி விடுகிறார்கள். இதுகுறித்து கேட்டால் உங்களுக்கு பெயர் ஆவணத்தில் இல்லை என்கிறார்கள். இதனால் வேலை இல்லாமல் பலர் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், முத்தரசநல்லூர்.

ஆபத்தான புளியமரம் அப்புறப்படுத்தபடுமா?

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே செம்பரை கிராமத்தில் நெடுஞ்சாலை ஓரத்தில் 100 ஆண்டு பழமையான புளியமரம் உள்ளது. இந்த மரத்தின் அடிபாகத்தில் பூச்சிகள் அரித்து எப்போது வேண்டுமானும் விழும் நிலையில் உள்ளது. இந்த மரம் விழுந்தால் உயிர் இழப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் அந்த புளியமரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், செம்பரை.

மேலும் செய்திகள்