கரூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க கோரிக்கை
கரூர் மாவட்டம், நன்செய் புகழூர் தவுட்டுப்பாளையம் பகுதியில் மின்சார வாரியம் சார்பாக மின் கம்பங்கள் நடப்பட்டு அதன் வழியாக தேசிய நெடுஞ்சாலை அருகே மிகவும் தாழ்வாக மின் கம்பிகள் செல்கிறது. இன்கம்பத்தில் மின் கம்பிகள் வருத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக முன் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் மின் கம்பிகள் உயரமாக செல்லும் வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்காத வகையில் மின் கம்பிகளை இழுத்து கட்ட வேண்டும் என பொதுமக்கள் , சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தவுட்டுபாளையம்.
அறிவிப்பு பலகை வைக்கப்படுமா?
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் -நொய்யல் செல்லும் சாலையில் கவுண்டன் புதூர் பிரிவு அருகே தார் சாலையின் குறுக்கே கடந்த சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டப்பட்டது. பாலம் கட்டப்பட்டு நீண்ட ஆண்டுகள் ஆனதன் காரணமாக பாலம் பழுதடைந்தது .அதன் காரணமாக புதிய பாலம் கட்டுவதற்காக அருகில் மண்சாலை போடப்பட்டு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குழி பறித்து பாலம் கட்டும் பகுதியில் முன்பகுதியில் எந்த ஒரு தடுப்புகளோ மாற்று பாதையில் செல்லுமாறு அறிவிப்பு பலகைகலோ வைக்கப்படவில்லை .இரவு நேரத்திலும் வாகனங்கள் செல்வதால் புதிதாக வருபவர்கள் இரவு நேரங்களில் வரும் போது நேராக சென்று பாலம் கட்டுவதற்கு பறிக்கப்பட்டுள்ள குழியில் விழுந்து உயிரிழக்கும் அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது . வாகன ஓட்டிகள் ஒப்பந்ததாரர்களிடம் இது குறித்து எடுத்துக் கூறியும் ஒப்பந்ததாரர் எதையும் கண்டு கொள்ளவில்லை.எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலம் கட்டும் பகுதியில் முன் பகுதியில் தடுப்புகள் அமைத்து அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கவுண்டன்புதூர்.
குண்டும், குழியுமான சாலை
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரத்தில் இருந்து புகழூர் காகித ஆலை செல்லும் சாலை போடப்பட்டு சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் புதிய சாலை அமைக்கப்பட்டிருந்தே தரமான தார் கலவைகள் போடப்படாதால் நெடுகிலும் சாலைகளில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், புன்னம்சத்திரம்.
பெண்களுக்கான சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?
கரூர் மாவட்டம் சேமங்கி எம்ஜிஆர் நகர் அருகே பெண்களின் நலன் கருதி சுகாதார வளாகம் கட்டப்பட்டது. பல ஆண்டுகளாக இந்த பகுதியை சேர்ந்த பெண்கள் சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சுகாதார வளாகம் பழுதடைந்துள்ளதால் அதை பெண்கள் பயன்படுத்த முடியாமல் இருந்து வருகின்றனர். இதன் காரணமாக இப்பகுதியை ச் சேர்ந்த பெண்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர் .எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்துள்ள சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், சேமங்கி.
ஆபத்தான குடிநீர் தொட்டியை மாற்ற கோரிக்கை
கரூர் மாவட்டம், பெரியவரப்பாளையத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி குடிநீர் தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது. தற்போது குடிநீர் தொட்டியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த தொட்டி இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்த தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பெரியவரப்பாளையம்.