< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கரூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
13 March 2023 12:00 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சுற்றுச்சுவர் கட்டித்தர கோரிக்கை

கரூர் மாவட்டம், குந்தாணிபாளையம் நத்தமேட்டில் பிரசித்தி பெற்ற ஈஸ்வரன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி, மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள், சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் சாமி சிலைகள் அதிகம் உள்ளது. இந்நிலையில் இக்கோவிலுக்கு சுற்றுச்சுவர் இல்லை. எனவே அறநிலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சுற்றுச்சுவர் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நந்தமேடு.

சாலையோரத்தில் துர்நாற்றம்

கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையம் அருகே சாலையின் ஓரத்தில் ஏராளமான கோழி கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றனர். மேலும் மருத்துவக் கழிவுகளையும், வீடுகளில் உள்ள கழிவுகளையும் அதிகளவில் குவிந்து கிடக்கிறது .இதனால் தார்சாலை வழியாக செல்லும் போது ஒரு விதமான துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. எனவே தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், தவுட்டுப்பாளையம்.

அரசு டாஸ்மாக் கடையை அகற்ற பெண்கள் கோரிக்கை

கரூர் மாவட்டம், மூலிமங்கலம் பிரிவு எதிரே கடந்த பல ஆண்டுகளாக அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை மற்றும் நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் கடை செயல்பட வேண்டும். ஆனால் இந்த டாஸ்மாக் கடை தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே செயல்படுகிறது. மது பாட்டில்களை வாங்க வருபவர்கள் டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு தேசிய நெடுஞ்சாலை அருகே அமர்ந்து மதுவை அருந்திவிட்டு கொண்டு வந்திருந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டு விட்டு மது பாட்டில்களை உடைத்து அங்கேயே போட்டுவிட்டு சில நேரங்களில் மது போதையில் அங்கேயே படுத்து விடுகின்றனர். அந்த வழியாக பெண்கள் செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளது. எனவே டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மூலிமங்கலம்

குண்டும், குழியுமான சாலை

கரூர் மாவட்டம் நொய்யல்- வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் முத்தனூர் அருகே கவுண்டன் புதூர் பகுதிக்கு செல்வதற்காக கடந்த சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை போடப்பட்டது. இதனால் சாலை தற்போது குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்கள் செல்பவர்கள் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக தார் சாலையை சீரமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நொய்யல்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

கரூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகே அப்பகுதியில் குடியிருப்பவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், கரூர்.

குடிநீர் தொட்டி சரிசெய்யப்படுமா?

கரூர் மாவட்டம், கூலக்கவுண்டனூரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இந்த தண்ணீரை அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்களும் பயன்படுத்தி வந்தனர். தற்போது குடிநீர் தொட்டியில் ஆங்காங்கே சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் சிலர் அந்த தொட்டி தெரியாத வகையில் விளம்பர பதாகைகளை ஓட்டி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

கார்த்திகேயன். கூலக்கவுண்டனூர்.

மேலும் செய்திகள்