< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திருச்சி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
8 March 2023 11:56 PM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தேங்கி நிற்கும் கழிவுநீர்

திருச்சி 39-வது வார்டு வ.காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்குள்ள தஞ்சை மெயின்ரோட்டில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாக கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அப்துல் ரகுமான், வ.காட்டூர்

மின்விளக்குகள் சரிசெய்யப்படுமா?

திருச்சி மாநகராட்சி, பீமநகர் , பண்டரி நாதபுரம், இளங்கோ டாக்டர் சந்து ஆகிய பகுதியில் மின்விளக்குகள் உள்ளது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக மின்விளக்குள் ஆங்காங்கே எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எரியாத மின்விளக்குகளை உடனடியாக மாற்றி புதிய மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருச்சி.

கழிவறைக்கு தண்ணீர் வசதி வேண்டும்

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ஆண்களுக்கான இலவச கழிவறை உள்ளது. இதனை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கழிவறையில் தண்ணீர் வசதி இல்லாததால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவறையில் தண்ணீர் வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனந்தகுமார், திருச்சி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், நத்தமாங்குடி பிரிவு ஆலங்குடி மகாஜனம் முதல் செங்கரையூர் வரை சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து நடவடிக்கை எடுத்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகாார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

ஆசைத்தம்பி, கோமாகுடி.

நாய்கள் தொல்லை

திருச்சி காஜாபேட்டை பெல்சி கிரவுண்டு காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் காணப்படுகிறது. இவை அப்பகுதியில் இரவு நேரங்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் மீது கடிக்க பாய்கின்றன. தற்போது தெருநாய்கள் 8-ம் மேற்பட்ட ஆடுகளை கடித்து குதறி உள்ளது. இதனால் இப்பகுதியினர் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே நாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், காஜாபேட்டை.

மேலும் செய்திகள்