அரியலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதியில் சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகள் சாலைகளில் மாலை நேரத்தில் படுத்து கொள்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
ராஜா, மீன்சுருட்டி.
குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வருமா?
அரியலூர் மாவட்டம், கா.அம்பாபூர் கிராமத்தில் ஏராளாமன பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிபொதுமக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8 லட்சம் மதிப்பில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. ஆனால் இன்று வரை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
தேவி, கா. அம்பாபூர்.
பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை
அரியலூர் மாவட்டம், முனியங்குறிச்சி கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஓட்டு கட்டிடத்தில் 1-ம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை 40 மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். இந்தநிலையில் கட்டிடம் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டது. தற்போது மாணவ-மாணவிகள் அருகில் ஒரு பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. அங்கு கடுமையான இடநெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மாணவ-மாணவிகள் படிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
குணசேகரன், முனியன்குறிச்சி.
தடுப்புச்சுவரை விரைந்து கட்ட வலியுறுத்தல்
அரியலூர் மாவட்டம், மு. புத்தூர் கிராமத்தில் மங்கட்டான் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரிக்கரையில் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் சில மாதங்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி சில மாதங்களுக்கு முன்பு தென்புற பகுதியில் இருந்து ஏரியின் நடுப்பகுதி வரை பாதியளவு மட்டும் தடுப்பு சுவர் அமைக்க பட்டுள்ளது. பிறகு ஏரியின் நடுப்பகுதியில் இருந்து வடக்கு பகுதி முடிவு வரை இது நாள் வரை தடுப்புச் சுவர்கள் அமைக்காமல் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே கிடப்பில் போடப்பட்ட பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், சேலத்தார்காடு.
வேகத்தடையில் வெள்ணை வர்ணம் பூசப்படுமா?
அரியலூர் மாவட்டம், விளாங்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமம் கும்பகோணம், அணைக்கரை மற்றும் தா. பழூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மிகவிரைவில் சென்று விடாலாம். இதில், விளாங்குடியில் இருந்து கீழ விளாங்குடி வரை 5 வேகத்தடைகள் போடப்பட்டுள்ளது. இந்த வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூசப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கின்றன. மேலும் சாலையும், வேகத்தடையும் ஒரே மாதிரியே இருப்பதால் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக 5 வேக தடைகளில் வெள்ளை நிற பெயிண்டும் மற்றும் சிவப்பு நிறப் பிரதிபலிப்பான்கள் ஒட்டி அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், விளாங்குடி.