< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கரூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
8 March 2023 11:53 PM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆபத்தான மின்கம்பம்

கரூர் மாவட்டம், காகிதபுரம், கொங்கு நகர், மெயின் சாலையில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் அஞ்சுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

ரமேஷ், காகிதபுரம்.

தடுப்புகள் அமைக்கப்படுமா?

கரூர் மாவட்டம், முத்தனூர் அருகே சாலையின் குறுக்கே பாலம் கட்டுப்படுவதற்காக பழைய பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. புதிய பாலம் கட்டுவதற்காக குழி பறிக்கப்பட்டுள்ளது. அருகில் தடுப்புகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் நொய்யல் பகுதியில் இருந்து வேலாயுதம் பாளையம் வருபவர்கள் குழி இருப்பது தெரியாமல் வாகனத்துடன் சிலர் கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் பலர் தட்டுதடுமாறி செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், முத்தனூர்.

பிளாஸ்டிக் கழிவுகளால் துர்நாற்றம்

கரூர் மாவட்டம், வெண்ணெய்மலையில் உள்ள சாலை ஓரத்தில் அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கிறது. இந்த கழிவுகள் காற்றில் பறந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வந்து விழுகிறது. சில நேரங்களில் வீடுகளின் சாப்பிட்டு கொண்டிருக்கும் திண்டபங்களில் மேல் வந்து படுகிறது. இந்த கழிவுகளால் அப்பகுதியில் கடும் துர்நாற்றமும் வீசி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

தேவராஜ், வெண்ணெய்மலை

சாலையில் கொட்டப்பட்ட ஆகாயத்தாமரைகள்

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே பாலத்துறையில் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முளைத்திருந்த ஆகாயதாமரைகள் அனைத்தும் அகற்றப்பட்டது. பின்னர் அந்த ஆகாய தாமரைகள் அனைத்தும் தேசியநெடுஞ்சாலையில் குவித்து வைத்துள்ளனர். இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து வருகின்றனர். இதனால் அந்த சாலையை ஒரு வழி சாலையாக தான் பயன்படுத்தி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

நொப்போலியன், பாலத்துறை.

குண்டும், குழியுமான சாலை

கரூர் மாவட்டம், காகம்பட்டி காமராஜபுரத்தில் சாலை குண்டு, குழியூமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், காகம்பட்டி.

மேலும் செய்திகள்