< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கரூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
6 March 2023 12:03 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தெரு நாய்கள் தொல்லை

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம், தோகைமலை ஒன்றியம், வடசேரி கிராமம் காவல்காரன்பட்டி கடைவீதியில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் இப்பகுதியில் செல்லும் பொதுமக்களை கடித்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், காவல்காரன்பட்டி

புகழூர் வாய்க்கால் தூர்வாரப்படுமா?

கரூர் மாவட்டம், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் வழியாக புகழூர் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் செல்லும் தண்ணீர் மூலம் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில் புகழூர் வாய்க்கால் தண்ணீரில் ஏராளமான தாமரைகள், செடி, கொடிகள் மிதந்து செல்கின்றன. அதேபோல் வாய்க்காலின் இரு கரை ஓரங்களிலும் தண்ணீரில் ஏராளமான செடி, கொடிகள் மிதக்கின்றன. இதனால் தண்ணீர் செல்ல தடை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

லாரன்ஸ், நொய்யல்

குண்டும், குழியுமான சாலை

கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையத்தில் இருந்து பாலத்துறை செல்லும் தார் சாலையில் சுமார் 200 மீட்டர் தூரம் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த சாலை வழியாக நடந்து செல்ல கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த சாலை வழியாக செல்லும் பஸ்கள், லாரிகள், கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் ஊர்ந்து தட்டு தடுமாறி செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ரம்யா, தவுட்டுப்பாளையம்

எரியாத தெருவிளக்குகள்

கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையம் அருகே கட்டிப்பாளையத்தில் கடந்த 20 நாட்களாக 3 தெருவிளக்குகளும், காளியப்பா நகரில் உள்ள 3 தெருவிளக்குகளும் பழுதாகி எரியாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து உள்ளதால் இப்பகுதியில் உள்ள மக்கள் இரவு நேரத்தில் வெளியே நடமாட பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ராதிகா, கட்டிப்பாளையம்,

பெண்கள் அவதி

கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையத்தை அடுத்த கட்டிபாளையத்தில் பெண்களின் பயன்பாட்டிற்காக பொதுக்கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிப்பிடத்தில் கடந்த 2 மாதங்களாக மின் மோட்டார் பழுதாகி இயங்காத நிலையில் கழிப்பிடத்தில் தண்ணீர் வசதி இல்லாமல் உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சரவணன், தவுட்டுப்பாளையம்

மேலும் செய்திகள்