< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
6 Feb 2023 12:00 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆபத்தான நிழற்குடை

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதி பெரியம்மாபாளையம் பஸ் நிறுத்தத்தில் பயணிகளின் வசதிக்காக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையின் மேற்கூரைகள் இரும்பினால் அமைக்கப்பட்டுள்ளதாலும், இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்த ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இந்த நிழற்குடையில் பொதுமக்கள் அமரும்போது இந்த நிழற்குடை இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த நிழற்குடையை அகற்றிவிட்டு புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மாரிசாமி, பெரியம்மாபாளையம்.

நாய்கள் தொல்லை

பெரம்பலூர் ரோஸ் நகருக்குள் நுழையும்போது வலது புறம் உள்ள தெருவில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை பின்னால் துரத்தி வந்து கடிக்க பாய்கிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், முதியவர்களும் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் சுற்றிதிரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

ெபாதுமக்கள், ெபரம்பலூர்.

மேலும் செய்திகள்