பெரம்பலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வடிகால் வசதி வேண்டும்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மழைநீர் செல்ல முறையான வடிகால் வசதி அமைத்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், ஆலத்தூர்.
வாகன ஓட்டிகள் அவதி
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா தேசிய நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலைப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வாகன ஓட்டிகள், ஆலத்தூர்.
முகாம் நடத்த வேண்டும்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா டி.களத்தூர் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கால்நடைகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு ஏற்படும் உடல்நிலை பாதிப்புகளை தடுக்க இப்பகுதியில் கால்நடை மருத்துவ முகாம் நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், டி.களத்தூர்.
இருள் சூழ்ந்த பகுதி
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பழைய தாலுகா அலுவலகம் முன்பும், குன்னம் போலீஸ் நிலையம் முன்பும் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு இருந்தது. அந்த மின் விளக்குகள் சரிவர எரியாததால் குன்னம் ஊராட்சி நிர்வாகம் உயர் கோபுரத்திலிருந்து மின் விளக்குகளை அகற்றியது. ஆனால் நீண்ட நாட்களாக மின் விளக்குகளை சரி செய்யாததால் அப்பகுதி இருள் சூழ்ந்து உள்ளது. எனவே உடனடியாக குன்னம் ஊராட்சி நிர்வாகம் மின் விளக்கை சரி செய்து பொருத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், குன்னம்.
வேகத்தடை அமைக்கப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, சாத்தனூர் கிராமத்தில் செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்ற வருகின்றன. இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் வேகமாக செல்வதினால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்த இப்பகுதியில் முக்கியமான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ரமேஷ், சாத்தனூர்.