< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திருச்சி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
23 Jan 2023 12:00 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:

கொசு தொல்லையால் அவதி

திருச்சி மாவட்டம், மல்லியம்பத்து ஊராட்சி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு இரவு நேரத்தில் கொசு தொல்லை அதிகமாக இருக்கிறது. இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள், குழந்தைகள் தூங்க முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இந்த பகுதியில் கொசு மருந்து அடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், மல்லியம்பத்து.

குண்டும், குழியுமான சாலை

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், புள்ளம்பாடி முதல் செங்கரையூர் வரையிலான சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளில் செல்வோர் சில நேரங்களில் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

செங்கரையூர், ஆசைத்தம்பி

ஆபத்தான மரம்

திருச்சி மாவட்டம் பொன்மலை 45 -வது வார்டு காருண்யா நகரில் மாநகராட்சி பூங்கா இடத்தில் உள்ள ஒரு பெரிய மரம் பட்டுப்போன நிலையில் காணப்படுகிறது. இந்த மரம் காற்று அடிக்கும்போது இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மீது முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ராஜ்குமார், காருண்யா நகர்

கொசு தொல்லையால் அவதி

திருச்சி மாவட்டம், மல்லியம்பத்து ஊராட்சி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு இரவு நேரத்தில் கொசு தொல்லை அதிகமாக இருக்கிறது. இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள், குழந்தைகள் தூங்க முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இந்த பகுதியில் கொசு மருந்து அடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், மல்லியம்பத்து

பயணிகள் அவதி

திருச்சி மாவட்டம், துறையூர், உப்பிலியபுரம், தாத்தையங்கார்பேட்டையிலிருந்து சென்னை செல்லும் அரசு பஸ்களுக்கான முன்பதிவு வசதி நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். தொலைதூர பயணங்களை முன்பதிவு மூலம் உறுதிபடுத்தியநிலையில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால் குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள், முதியவர்கள் கடைசி நேர பயண விளிம்பில் முண்டியடித்துக்கொண்டு ஏறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், துறையூர்

மேலும் செய்திகள்