அரியலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குரங்குகள் தொல்லை
அரியலூர் மாவட்டம், செந்துறை கிராமத்தில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்து வீட்டில் உள்ள மளிகை பொருட்கள், தின்பண்டங்கள் உள்ளிட்டவைகளை எடுத்துச்செல்வதுடன் குழந்தைகளை கடிக்க வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், செந்துறை
கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதியில் சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகள் சாலைகளில் மாலை நேரத்தில் படுத்து கொள்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், மீன்சுருட்டி.
லாரிகளால் நெரிசல்
அரியலூர் மாவட்டம், வி. கைகாட்டி புறக்காவல் நிலையம் முன்பு உள்ள சாலையோரங்களில் ஏராளமான லாரிகள் நீண்ட நேரம் அணிவகுத்து நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் 108 ஆம்புலன்ஸ்கள் நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. மேலும் சாலைகளில் ஆங்கே பள்ளங்கள் ஏற்பட்டு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் மழை நீர் ஆங்காங்கே தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இதகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், வி.கைகாட்டி.