< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
29 Dec 2022 12:42 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெயர் பலகையுடன் பஸ் இயக்க கோரிக்கை

புதுக்கோட்டையில் இருந்து முக்கண்ணாமலைப்பட்டி வழியே திருச்சி செல்லும் அரசு புறநகர பஸ் முக்கண்ணாமலைப்பட்டி வழி செல்லும் என பெயர் பலகையின்றி செல்கிறது. இதனால் முக்கண்ணாமலைப்பட்டி செல்லும் பயணிகள் டிரைவர், கண்டக்டரிடம் கேட்டு பயணிக்க வேண்டியுள்ளது ஆகையால் சமந்தப்பட்ட அதிகாரிகள் பெயர் பலகையுடன் பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

ரகுமத்துல்லா, முக்கண்ணாமலைப்பட்டி.

தெருநாய்கள் தொல்லை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் மங்களாபுரம் கிராமம் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. அவை சாலையில் செல்வோரை துரத்தி கடித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சாலையில் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பஸ் வசதி வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் முதல் கட்டுமாவடி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலை பகுதி புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்தது. மேற்கண்ட சாலையில் கிருஷ்ணாஜிபட்டினத்திற்கு அடுத்து உள் புறமாக காரக்கோட்டை என்ற ஊர் உள்ளது. அந்த ஊரில் கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து 3-வது கிலோ மீட்டரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும், 5-வது கிலோ மீட்டரில் அரசு உயர்நிலைப்பள்ளியும் உள்ளன. கிருஷ்ணாஜிபட்டினத்திற்கு அடுத்து கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து காரக்கோட்டைக்கு செல்லும் பாதையை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள் தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நடந்தும், சைக்கிளிலும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாணவர்களின் நலனை கருதி இப்பகுதியில் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஹபிபுல்லா, காரக்கோட்டை.

சேதமடைந்த நிழற்குடை

புதுக்கோட்டை மாவட்டம், புள்ளான்விடுதி அரசு உயர்நிலைப்பள்ளி அருகே பயணிகள் நிழற்குடை ஒன்று உள்ளது. இந்த நிழற்குடையை அப்பகுதி பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் கஜா புயலில் இந்த பயணிகள் நிழற்குடை சேதமடைந்தது. தற்போதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், புள்ளான்விடுதி.

குடிநீர் வழங்க நடவடிக்கை தேவை

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுகா, பேரானூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பஞ்சாயத்து சார்பில் குழாய் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை குழாயில் தண்ணீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், பேரானூர்

மேலும் செய்திகள்