திருச்சி
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வாகனங்களில் இருந்து அதிகமாக வெளியேறும் புகை
திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டி முதல் தொப்பம்பட்டி வரை உள்ள தார்சாலை குண்டும், குரியுமாக உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் பல்வேறு லாரி உள்பட கனகரக வாகனங்கள் சென்று வருகிறது. இதனால் வாகனங்களில் இருந்து வெளியே அதிக புகை வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் முதியவர்கள், குழந்தைகளுக்கு கண் எரிச்சல் மற்றும் சுவாச கோளாறு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து, வாகனங்களில் இருந்து வரும் அதிகமான புகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனிசாமி, தொப்பம்பட்டி.
புதிய துணை சுகாதார நிலையம் கட்டப்படுமா?
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கீழக்குன்னுப்பட்டியில் அரசு துணை சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலைய கட்டிடம் எப்போது வேண்டுமாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இங்கு செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன்கருதி துணை சுகாதார நிலையத்தை இடித்து புதிதாக கட்டிடத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
கார்த்திக், கீழக்குன்னுப்பட்டி.
நாய்கள் தொல்லை
திருச்சி காஜாபேட்டை பெல்சி கிரவுண்டு காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் காணப்படுகிறது. இவை அப்பகுதியில் இரவு நேரங்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் மீது கடிக்க பாய்கின்றன. தற்போது தெருநாய்கள் 8-ம் மேற்பட்ட ஆடுகளை கடித்து குதறி உள்ளது. இதனால் இப்பகுதியினர் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே நாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், காஜாபேட்டை.
சாலை பணி விரைந்து முடிக்கப்படுமா?
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரெயில்வேகேட் முதல் கொள்ளிடம்கரை யாத்ரிநிவாஸ் வரை இணைப்பு தார்சாலை போடுவதற்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது வரை ஆங்காங்கே குழிகள் மட்டுமே தோண்டப்பட்டுள்ளது. எந்த பணியும் தொடங்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பாலசுப்பிரமணியம், ஸ்ரீரங்கம்.
குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், பெருவளப்பூர்-சிறுகளப்பூர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் ஒரு வாரத்திற்கு ஒரு முறை விபத்துகள் ஏற்பட்டு வருகிறத. மேலும் அந்த வழியாக பள்ளி, கல்லூரிகளுக்கு சைக்கிள் மற்றும் வாகனங்களில் செல்லும் மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், சிறுகளப்பூர்.