பெரம்பலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தேங்கி நிற்கும் மழைநீர்
பெரம்பலூர் மாவட்டம், டி.களத்தூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தற்போது இப்பகுதியில் பருவ மழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மழைநீர் செல்ல வடிகால் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், டி.களத்தூர்.
தார்ச்சாலை சரிசெய்யப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம், விராலிப்பட்டி கிராமத்தில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் அந்த வழியாக நடந்து செல்வே பெரிதும் சிரமமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், விராலிப்பட்டி.