திருச்சி
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெருநாய்கள் தொல்லை
திருச்சி காஜாமலை காளியம்மன் கோவில் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் காணப்படுகிறது. இவை அப்பகுதியில் இரவு நேரங்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் மீது கடிக்க பாய்கின்றன. இதனால் இப்பகுதியினர் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே நாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சாகுல்ஹமீது, காஜாமலை.
சாலை புதுப்பிக்கப்படுமா?
திருச்சி சுப்பிரமணியபுரம் 2-வது தெருவில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலையானது குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் குழந்தைகள், கர்ப்பிணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கடிதம் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், சுப்பிரமணியபுரம்.
தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுநீர்
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வாழவந்தான் கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் பிரதான சாலையில் சாக்கடை வசதியில்லாமல் மழை காலங்களில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா உள்பட பல்வேறு நோய்கள் பரவ அதிகவாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், வாழவந்தான்கோட்டை
திறந்து கிடக்கும் கழிவுநீர் வாய்க்கால்
திருச்சி மாநகராட்சி கிராப்பட்டி முஸ்லிம் குறுக்கு தெரு 3, 4 மற்றும் 5-வது தெருவில் சுமார் 150 வீடுகள் உள்ளன. இப்பகுதியில் மெயின் ரோட்டில் இருந்து மேற்படி சந்துக்களில் நுழையும் இடத்தில் கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. இந்த கழிவுநீர் வாய்க்காலை சுத்தம் செய்யும் வகையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் வாய்க்கால் மேல் போடப்பட்டு இருந்த சிலாப்கள் அகற்றப்பட்டன. ஆனால் பணி முடிந்த பிறகும் மீண்டும் சிலாப்புகள் பொருத்தப்படாமல் உள்ளது. திறந்த நிலையில் காணப்படுவதுடன், தெருக்களில் நுழையும் இடத்தில் மட்டும் பலகை அமைக்கப்பட்டுள்ளது. அந்த பலகையும் மக்கிப்போன நிலையில் உடையும் தருவாயில் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கிராப்பட்டி.
பயனற்ற பயணியர் நிழற்குடை
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், வைரிசெட்டிப்பாளையம் ஊராட்சி சந்தை அருகேயுள்ள பயணியர் நிழற்குடை, ஆக்கிரமிப்புடன் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. உயர்நிலைப்பள்ளி மாணவ-மணவிகள், சந்தைக்கு வரும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட இந்த நிழற்குடை, பயன்படுத்த முடியாத நிலையிலுள்ளது. மேலும் இரவு நேரங்களில் மதுப்பிரியர்களின் கூடாரமாக உள்ளதால் மதுபாட்டில்கள், உடைந்த கண்ணாடி பாட்டில்கள், சிறுநீர் கழித்தல், குப்பைகள் சூழ துர்நாற்றத்துடன் காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வைரிசெட்டிப்பாளையம்