அரியலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
அரியலூர் சிவன் கோவில் பஸ் நிலையம் செல்லும் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
திவாகரன், அரியலூர்.
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் ஏராளமான கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இதனால் இப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
திவ்யா, ெஜயங்கொண்டம்.
சாலையில் பள்ளம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம்-விருத்தாச்சலம் சாலையில் உள்ள ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் எதிரே சாலையில் பள்ளம் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலையின் வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலை தட்டுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சோமசுந்தரம், ெஜயங்கொண்டம்.
வடிகால் வசதி வேண்டும்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவமங்கலம் வடக்குத்தெருவில் சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள சிமெண்டு சாலையில் தற்போது பெய்த மழையால் சாலையில் முழுவதும் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. மேலும் இதனால் சில வீடுகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து இரவில் தூங்க முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும் தேங்கி நிற்கும் மழை நீரால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அவ்வழியாக குடியிருப்பு வாசிகள், பாதசாரிகள், இருசக்கர வாகனம், ஆடு, மாடுகள் உள்ளிட்டவைகள் செல்லும்போது மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் ஓதம் காத்து வீட்டில் படுக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்து மருத்துவமனை சென்று திரும்பிய சம்பவமும் நடந்துள்ளது. மேலும் இதனால் அப்பகுதியில் குடியிருப்பு வாசிகளுக்கு அதிவிரைவில் நோய் தொற்று பரவும் அபாயமும் இருப்பதால் அந்த மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்தி இப்பகுதியில் முறையாக வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஆனந்த், தேவமங்கலம்.
தூர்வாரப்படாத வரத்து வாய்க்கால்
அரியலூர் அய்யப்பன் ஏரிக்கு வரும் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் ஆகாயத்தாமரைகள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் மழை பெய்யும் போது மழை நீர் இந்த ஏரிக்கு வர முடியாமல் பெரிதும் தடையாக உள்ளது. இதனால் மழை நீரை முழுமையாக சேகரிக்க முடியாமல் கோடை காலங்களில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறை அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்றி தூர்வார வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
முத்துக்குமார், அரியலூர்.