பெரம்பலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குழந்தைகளை கடிக்கும் தெருநாய்கள்
பெரம்பலூர் மூன்று மற்றும் நான்காவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகள், பாரதிதாசன் நகர் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் சிறுவர், சிறுமிகளை கடித்து வருவதுடன், இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துகின்றன. இதனால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்.
குரங்குகள் அட்டூழியம்
பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு இடையூறாக குரங்குகளின் அட்டூழியம் செய்து வருகின்றன. அவை நோயாளிகளுக்கு வாங்கி வரும் திண்பண்டங்களை எடுத்து செல்வதுடன், நோயாளிகளை கடிக்க வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்.
வீணாகும் குடிநீர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கலம் ஊராட்சியில் ரேசன் கடை அருகே அரும்பாவூர் செல்லும் சாலையில் சாலையோரத்தில் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு சாலையில் எந்த நேரமும் நீர் வழிந்தோடுகிறது. இதனால் கிருஷ்ணாபுரம்-அரும்பாவூர் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வெங்கலம்.
தேங்கியுள்ள கழிவுநீர்
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் புள்ளம்பாடி செல்லும் சாலையில் மின்சார வாரிய அலுவலகம் உள்ளது. இதன் அருகே அப்பகுதியில் வசிக்கும் வீடுகளில் இருந்து கழிவுநீர் வருகிறது. அது சாலை ஓரத்தில் பல ஆண்டுகளாக தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் கழிவுநீர் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், ஊட்டத்தூர், புள்ளம்பாடி செல்லும் பொதுமக்கள் அவதியுறுகின்றனர். எனவே இப்பகுதியில் கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தருவதுடன், தேங்கியுள்ள கழிவு நீரையும் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பாடாலூர்.
சாய்ந்த மின் கம்பம்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூர் செல்லும் ஏரி வழி பாதை பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் சாய்ந்த நிலையில் மின் கம்பம் உள்ளது. தற்போது பெய்து வரும் மழையில் இந்த மின்கம்பம் கீழே விழுந்தால் அப்பகுதியில் நடந்து செல்லும் மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், இரூர்.