< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திருச்சி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
8 Dec 2022 12:20 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

போலீசார் ரோந்து செல்ல கோரிக்கை

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், நத்தம் கிராமத்தில் இருந்து தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பஸ்சில் செல்லும் மாணவர்கள் பலர் படிக்கட்டுகளில் தொங்கியபடி வருகின்றனர். இதனால் தினமும் மாணவர்கள், பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது. இதனால் சரியாக நேரத்திற்கு குறிப்பிட்ட இடத்திற்கு பயணிகள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட போலீசார் பஸ் வரும் நேரங்களில் அந்த பகுதியில் ரோந்து வந்து பஸ் படிக்கட்டுகளில் தொங்கி வருவர்களை எச்சரிக்கை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

நாகராஜசோழன், நத்தம்.

வேகமாக செல்லும் பஸ்களால் விபத்து

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தினமும் சத்திரத்திற்கு ஏராளமான தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் சத்திரத்தில் இருந்து புறப்பட்டு மத்திய பஸ் நிலையம் வரும்போதும், பின்னர் இங்கிருந்து செல்லும்போது அதிவேகமாக செல்கிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் பல தனியார் பஸ்களின் டிரைவர்கள் பயணிகளை குறிப்பிட்ட நிழற்குடையில் நிறுத்தி ஏற்றாமல் சாலையின் நடுவழியில் ஆட்களை ஏற்றி வருகின்றனர். இதனால் பின்னால் வரும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசார் இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கல்பனா, திருச்சி.

நாய்கள் தொல்லை

திருச்சி மாவட்டம், கல்லக்குடி பேரூராட்சி 3-வது வார்டு பகுதியில் கடந்த சில மாதங்களாக மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளை நாய்கள் துரத்தி சென்று கடித்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் ஏராளமான ஆடுகள் இறந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், கல்லக்குடி.

வீடுகளுக்குள் ெசல்லும் கழிவுநீரால் அவதி

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்துள்ள செங்காட்டுப்பட்டியில் இருந்து பூனாட்சி செல்லும் சாலையிலுள்ள செட்டிப்பிள்ளையார் கோவில் தெருவில் கழிவுநீர் பாதை அடைக்கப்பட்டுள்ளது. அதனால் மழை பெய்யும் நேரங்களில் மழைநீரும், கழிவுநீரும் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்ைகயும் எடுக்க வில்ைல. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடிவடிக்கைகள் எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.

ெபாதுமக்கள், செங்காட்டுப்பட்டி.

குண்டும், குழியுமான சாலை

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் சேனப்பநல்லூரில் இருந்து நாகமநாயக்கன்பட்டி செல்லும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் தவறி விழுந்து வருகின்றனர். மேலும் பொதமக்கள், முதியவர்கள் நடந்து செல்வே முடிவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனந்தகுமார், சேனப்பநல்லூர்.

மேலும் செய்திகள்