< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
5 Dec 2022 12:50 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆபத்தான மின்கம்பம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ராங்குடி கிராமத்தில் உள்ள ஏரி முன் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சித்ரா, ராங்குடி.

குரங்குகள் தொல்லை

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், ஆனந்தவாடி ஊராட்சி ஆ.சோழங்குறிச்சி கிராமத்தில் ஏராளமான குரங்கள் சுற்றிதிரிகிறது. இந்த குரங்குகள் வீடுகளில் புகுந்தும் உணவு மற்றும் திண்பண்டங்களை தூக்கி சென்று வருகிறது. மேலும் வீடுகளின் மேற்கூறைகளை பிரித்து நாசமாக்கி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் உடனடியாக குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

சக்திவேல், ஆ.சோழங்குறிச்சி.

மேலும் செய்திகள்