< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
20 Nov 2022 6:30 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தில் குன்னுமேடு சிற்றேரியில் சிதிலமடைந்த நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 14-ந்தேதி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தி எதிரொலியாக சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் அந்த பழைய மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பத்தை நட்டனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

துரை, செட்டிகுளம்.

ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்

பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே நகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளில் சிலர் தற்போது சாலையோரங்களில் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். தற்போது காய்கறி மார்கெட்டுக்கு செல்லும் சாலையில் வியாபாரிகள் இருபுறமும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாகவும், ஏற்கனவே நகராட்சி கட்டிடங்களில் வாடகை கொடுத்து இயங்கும் மருத்துவமனைகள், கடைகள் உள்ளிட்டவைக்கும், அங்கு வருபவர்களுக்கும் இடையூறாகவும் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் நகராட்சி வாடகை கட்டிடங்களில் இயங்கும் மருத்துவமனைகளுக்கும், கடைகளுக்கும் பொதுமக்களால் செல்ல முடியவில்லை. இடையூறு இல்லாமல் கடை வைககுமாறு அவர்களிடம் கூறினால் மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் காய்கறி மார்க்கெட் சாலையில் உள்ள போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பெரம்பலூர்

பொதுமக்களுக்கு இடையூறு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம் வ. கீரனூர் கிராமத்தில் தெருக்களில் தினமும் ஏராளமானவர்கள் கூடி உற்கார்ந்து கொண்டு பணம் வைத்து சூதாடி வருகின்றனர். இதனால் அந்த வழியாக பொதுமக்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட போலீசார் இதுகுறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விநாயக்தீனா, வ.கீரனூர்.

தார்சாலை வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூர் கிராமத்தில் உள்ள மயானத்திற்கு செல்லும் மெட்டல் சாலை உள்ளது. இதனால் பொதுமக்கள் அந்த வழியாக செல்லும்போது மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மெட்டல் சாலையை தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ராயப்பன் மருவத்தூர்.

வாகன நிறுத்தம் வேண்டும்

பெரம்பலூரில் புதிய மற்றும் பஸ் நிலையங்கள் தனித்தனியாக உள்ளது. இதனால் தினமும் ஏராளமான பொதுமக்கள், தொழிலாளர்கள், பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் தங்களது இருசக்கர வாகனங்களில் பெரம்பலூருக்கு வந்து பின்னர் பஸ்களில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால் மேற்கண்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களை நிறுத்த வாகன நிறுத்தம் (பார்க்கிங்) வசதி இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

மேலும் செய்திகள்