< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கரூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
20 Nov 2022 6:30 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சுற்றுச்சுவர் கட்டப்படுமா?

கரூர் மாவட்டம், புஞ்சை கடம்பங்குறிச்சிஊராட்சி பெரியவரப்பாளையத்தில் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் ஒன்று உள்ளது. இந்தநிலையில் சுகாதர வளாகத்தை சுற்றி கட்டப்பட்டுள்ளள சுற்றுச்சுவரில் வெடிப்பு ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. மேலும் வளாகத்தின் உள்பகுதிகளிலும் ஆங்காங்கே சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பெரியவரப்பாளையம்.

ஆபத்தான மின்கம்பம்

கரூர் மாவட்டம் குளித்தலை சேதுரத்தினம் பிள்ளை தெருவில் இருந்து மலையப்ப நகர் செல்லும் வழியில் இடதுபுறம் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போதும் வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இந்த அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடடேன சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், குளித்தலை

தெருவிளக்கு வேண்டும்

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி அண்ணாநகர் 4-வது வார்டில் இரவு நேர தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் கடுமையாக இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் விஷ ஜந்துகள் அதிகளில் சுற்றி திரிகிறது. இதனால் இரவில் தெருவில் நடக்க பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்த வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணிவேல், பள்ளப்பட்டி.

சாக்கடை வசதி வேண்டும்

கரூர் மாவட்டம், தாந்தோணிமலை நிலாநகர் கிழக்கு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த பல ஆண்டுகளாக இங்கு சாக்கடை வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், தாந்தோணிமலை.

மேலும் செய்திகள்